Compare Listings

NRI-சொத்து வாங்குவதில் செய்ய மற்றும் செய்ய கூடாதது

NRI-சொத்து வாங்குவதில் செய்ய மற்றும் செய்ய கூடாதது
Please follow and like us:
onpost_follow

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்  (NRI) இந்தியாவில் நிலத்தில் முதலீடு செய்வதில் என்றுமே ஆர்வம் கொண்டு உள்ளார்கள். வெளிநாட்டில் வாழும் நீங்கள்,  பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் சரியான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். சில சமயங்களில் அறியாமையின் காரணங்களினால் உங்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆவதில்லை. முதலீட்டாளர்களாக நீங்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது பற்றிய அடிப்படை தகவல்கள.

  • தற்போதைய காலசூழல்களில், தமிழ்நாட்டில் மட்டும் இன்றி, இந்தியா முழுவதும் பல ப்ரொபேர்ட்டி டெவலப்பர்ஸ்கள்  முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ப்ரோபெர்ட்டி ஷோ போன்ற பல முறைகளை பயன்படுத்துகிறார்கள். சொத்துவாங்க நினைக்கும் நீங்கள் ப்ரோபெர்ட்டி ஷோ மற்றும் அழகான துண்டு சீட்டுகளை மட்டுமே முழுமையாக நம்புவது ஆரோகியமான வழிமுறை அல்ல. நீங்களோ அல்லது உங்களின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதியோ நீங்கள் விரும்பும் சொத்துக்களின் தளத்தை பார்வையிட வேண்டும் மற்றும் நிலத்தின் உண்மைகளை சரிபார்க்க வேண்டும். அனைத்து ரியல் எஸ்டேட் முதலீடுகளைப் போலவே, நிலத்தின் இடம் கவர்ச்சிகரமானதாகவும், இடத்தினை சென்று அடைய நல்ல இணைப்புகள் இருத்தல் அவசியம்.
  • விலை மற்றொரு முக்கிய அம்சம். பல சமயங்களில் வெளிநாட்டில் இருந்து   சொத்து வாங்குவோருக்கு, உள்நாட்டில் இருந்து வாங்குவோருக்கு அளிக்கப்படும் விலையை விட அதிகம் மேற்கோள் இடப்டுகிறது. மேலும் உள்நாட்டில் வாங்குவோருக்கு அளிக்க படும் அணைத்து சலுகைகளும் வெளிநாட்டில் இருந்து வாங்கிவோற்கு அளிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், சொத்து வாங்குபவர் இந்தியாவில் விற்கப்படும் திட்டத்தின் விகிதத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
  • நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் நிலத்தின் சட்ட திடங்கள்கை அறிந்து செயல்படுவது மிகவும் அவசியமானது. பல வளர்ந்த நாடுகளில் ரியல் எஸ்டேட் சட்ட திட்டங்கள் முழுமையாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சொத்து வாங்குவது என்பது எளிதான விஷயம் அல்ல. உங்களால் சொத்தினை வாங்குவதற்கு வர இயலவில்லை ஏன்றால் உங்களின் நம்பிக்கைக்கு உரிய பிரதிநிதியை பவர் ஏஜென்டாக நிர்ணயம் செய்வது அத்தியாசம். நில உரிமை, சொத்து வில்லங்கம், கட்டிட அப்ருவல் போன்ற விசயங்களை பரீசீலனை செய்து சரிபார்த்தல் மிகவும் அவசியம்.
  • நீங்கள் முழுமையாக வெளிநாட்டில் வால்வோராயின், உங்களுக்காக உங்கள் சொத்துகளை இந்தியாவில் பராமரிபதற்கு ஒரு பிரதிநிதி மிகவும் அவசியம். (இடத்தினை விளம்பரம் செய்வது, நல்ல வாடகைதாரர்களை தேர்வு செய்வது வாடகை வசூலிப்பது, அவசிய மைண்டனன்ஸ் போன்றவற்றை பார்துகொல்வதற்கு). சொத்தினை பார்த்து வாங்குவது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அதனை பராமரிப்பதும் அவசியம்.

நினைவிருக்கட்டும் நீங்கள் உங்கள் முதலீட்டிலிருந்து அதிக வருமானம் எதிர்பார்பீர்கலாயின், நீங்கள் அதற்கான நல்ல கமர்சியலான இடத்தினை தேர்ந்து எடுப்பது அவசியம். ரேசிடன்சியல் ப்ரோபெர்டிகளில் இருந்து வரும் வருமானம் சற்றே குறைவாகவே இருக்கும், இருப்பினும் காலபோக்கில் நிலத்தின் விலை உயர்துவிடும்.

நீங்கள் பிளாட் / இடம்  வாங்க விரும்பினால் நல்ல நம்பிக்கையான ப்ரோபெர்ட்டி ஏஜென்டினை தேர்ந்தேடுப்பதில் தவறில்லை. ப்ரோபெர்ட்டி ஏஜெண்ட்ஸ் இதனை தொழிளாக கொண்டுள்ளதால், நில உரிமை, சொத்து வில்லங்கம், கட்டிட அப்ருவல் போன்ற பல அடிப்படைகளை எளிதாக பரிசீலித்து விடுவார்கள்.

உங்கள் தேடல் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்

 

img

Syed M Ishak

Related posts

பட்டா பெயர் மாற்றம் மட்டும் போதாது! சிட்டா, அ-பதிவேடு, புலப்படத்திலும் மாற்றம் செய்யபட வேண்டும்!

பட்டா மனு செய்யும் முறை ஆன்லைன்...

Continue reading
by Syed M Ishak

பட்ஜெட் ஜூலை 2019

ஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75%...

Continue reading
by Syed M Ishak

யூடிஆர் (கூட்டு பட்டா)/ கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை

UDR பட்டாவில் தவறான நபர் பெயர்...

Continue reading
by Syed M Ishak

Join The Discussion

Follow by Email
Skype
Twitter
Whatsapp