Compare Listings

TDS வரி பற்றி சில தகவல்கள்

TDS வரி பற்றி சில தகவல்கள்
Please follow and like us:
onpost_follow

TDS என்றால் என்ன

TDS – Tax Deduction at Source. தற்போதைய இந்திய அரசின் ஆணை படி ஒரு அசையாச் சொத்தினை வாங்குபவர், சொத்து பரிவர்த்தனைக்கான மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் விற்பனையாளருக்கு பணம் செலுத்துகின்ற அதேவேளை, TDS வரியையும் செலுத்த வேண்டும்.

இந்திய அரசாங்கம் அசையாச் சொத்து நடவடிக்கைகளில் கருப்பு பணத்தை பெருமளவில் பயன்படுத்துவதை சரிபார்க்க, ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பரிவர்த்தனையின் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194IA  படி, வாங்கும் விலையில்  1% வரி செலுத்த வேண்டும். இந்த பிரிவில் குடியிருப்பு சொத்து, வணிக சொத்து, நிலமும் உள்ளடங்கும். இருப்பினும், விவசாய நிலம் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இந்த விதிமுறைகளின் கீழ் இல்லை.

யார்க்கு பொருந்தும் TDS

50 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்பு கொண்ட ஒரு சொத்தினை வாங்குபவர்க்கு பொருந்தும். நீங்கள் 50 லட்சம் மதிப்பிற்கு குறைவாக சொத்து வாங்கினால் நீங்கள் TDS வரி செலுத்த தேவையில்லை.

50 லட்சம் அல்லது அதற்கு மேல் மதிப்பு கொண்ட ஒரு சொத்தினை  வாங்குபவர், தனது சொத்துக்கான விற்பனையாளருக்கு பணம் செலுத்துகையில், விற்பனையாளர் கட்ட வேண்டிய வருமான வரியை கழித்து மீதம் உள்ள தொகையை மட்டும் செலுத்துதல் அவசியம். களிகபட்ட இந்த வரி, சொத்து வாங்குபவரால் பத்திர பதிவு தேதியில் இருந்து அல்லது முன் பணம் கொடுக்க பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் பாரம் கம் செல்லான் # 26QB பயன்படுத்தி மத்திய அரசிற்கு கட்ட பட வேண்டும்.

பொதுவாக, TDS வரியை கழிக்க பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு TAN  (வரி விலக்கு கணக்கு எண்) பெற வேண்டும். இருப்பினும், அசையாச் சொத்தினைப் பொறுத்தவரை TDS விஷயத்தில், வாங்குபவர் TAN ஐ வாங்க வேண்டியதில்லை. படிவம் 26QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், முகவரி, பான் (PAN), மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை வழங்க வேண்டும். நீங்கள் ஒப்பந்தத்தின் தேதி, சொத்தின்  முழு மதிப்பு, பணம் செலுத்தும் தேதி, முதலியன சேர்த்து சொத்தின் முழுமையான முகவரியையும் வழங்க வேண்டும்.

சொத்தினை வாங்குபவர் விற்பனையாளரின் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும், இல்லையெனில் விற்பனையாளருக்கு கிடைக்க கூடிய வரி விளக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

எவ்வாறு செலுத்துதல்

TDS வரி ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகளின் மூலமாகவோ செலுத்தபடலாம். வங்கி மூலம் செலுத்தினால், வங்கி வருமான வரித்துறையின் வெப்சைட்டில் பதிவு செய்யும். TDS வரி செலுத்த பட்ட உடன், சொத்து வாங்குபவர், வரி செலுத்தியதற்கான அத்தாட்சியை பாரம் 16b யில் வருமான வரித்துறை வெப்சைட்டில் இருந்து எடுத்து சொத்து விற்றவருக்கு 15 நாட்களுக்குள் அளிப்பது அவசியம்.

மேலும் விபரங்கள் மற்றும் எங்கள் உதவி தேவையெனின் எங்களை அணுகவும்.

உங்கள் தேடல் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

img

Syed M Ishak

Related posts

பட்ஜெட் ஜூலை 2019

ஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75%...

Continue reading
by Syed M Ishak

வாடகை ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறை

பிப்ரவரி22, 2019 முதல் தமிழ் நாட்டில்...

Continue reading
by Syed M Ishak

இடைக்கால பட்ஜெட் 2019 – ரியல் எஸ்டேட் துறைக்கான மூன்று முக்கிய திருத்தங்கள்

பணமதிப்பிழப்பீடு, GST வரி போன்ற...

Continue reading
by Syed M Ishak

Join The Discussion

Follow by Email
Skype
Twitter
Whatsapp