கருத்தில் கொள்ள வேண்டிய சட்ட மற்றும் வரி விதிப்பு விதிகள் – குடியிருப்பு விற்பனை

Please follow and like us:
onpost_follow

ஒரு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைக்கு, வரி மற்றும் சட்ட ஆவணங்கள் முக்கியமான அம்சங்களாகும். விற்பனையாளரின் பார்வையில் இருந்து மேலோட்டமாக இந்த அம்சங்களை ஆராய்வோம்.

இடையுறு இல்லாமல் ஒரு சொத்து வாங்குவதில் நாம் எவ்வளவு அக்கறை கொள்வோமோ அதே போன்று அதனை விற்கும் போதும் நம் அக்கறை கொள்ளுதல் அவசியம். சொத்தினை விற்பதற்கு சட்ட மற்றும் வரிவிதிப்பு, இரண்டு முக்கிய அம்சங்கள் என்றாலும் அத்துடன் வீட்டு உரிமையாளர்கள் பரிவர்த்தனை செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும். சொத்தினை வாங்குபவருடன் வெளிப்படையாக கலந்து பேசி பரிவர்த்தனையின் செலவுகளை யார் எந்த செலவுகளை ஏற்றுகொள்வது என்று அறிந்து கொள்வது நல்ல வழிமுறை.

வீடு விற்பனை – வரி தாக்கங்கள்

ஒரு சொத்தினை வாங்கிய இரண்டு வருடங்களுக்குள் விற்றால், விற்று வரும் லாபம், விற்றவரின் குறுகிய கால மூலதன ஆதாயமாக கருதப்படுகிறது. இந்த லாபம் விற்றவரின் வருமானமாக கருதப்பட்டு, அவருடைய ஆண்டு வருமானதிர்கேற்ப வரி விதிக்கப்படும்.

ஒரு சொத்தினை வாங்கிய ஐந்து வருடங்களுக்குள் விற்றால், வரி விளக்கு (சலுகைகள்) அந்த சொத்திற்காக பெற்றிருப்பின், அவை அனைத்தும் மீண்டும் வரி கட்டணத்திற்கு உள்ளாகும்.

வாங்கும் சொத்துடைய மதிப்பு 50 லட்சம் மற்றும் மேலாக இருப்பின், TDS வரி 1% கணக்கீட பட்டு, பாரம் 26QB பயன்படுத்தி, சொத்தினை வாங்குபவர் விற்பவற்காக வருமான வரித்துறைக்கு வரி செலுத்துதல் அவசியம். TDS வரி பற்றி மேலும் அறிய

வீடு விற்பனை – சட்ட அம்சங்கள்

  • தொடக்கத்தில் விற்பவரும் – வாங்குபவரும் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ஒவ்வொரு கட்சியின் பொறுப்பு ஆகியவற்றையும் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்வது அறியுருத்தபடுகிறது
  • விற்பனை ஒப்பந்தம் ஒரு சட்ட வல்லுனரால் தயாரிக்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் எந்தவொரு விவகாரத்தையும் தவிர்ப்பதற்கு, விற்பனை ஒப்பந்தம் முற்றிலும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
  • விற்பனை ஒப்பந்தத்தில் சொத்து கையகப்படுத்துதல் உட்பிரிவுகள் உள்ளன, அவை பின்பற்ற பட வேண்டும். சொத்து கை மாறுவதில் ஒப்புகொள்ளப்பட்ட கால அவகாசத்திற்கு மேல் தாமதம் இருப்பது சட்டத்தின் படி குற்றமாகும், ஆகையால் அதனை தவிர்ப்பது நன்மை.

வீட்டு உரிமையாளர்கள் ஒரு நிபுணரின் உதவியுடன் சொத்து தொடர்பான ஆவணங்களின் பட்டியலை தயாரித்து அதனை வீட்டினை வாங்க விருப்பமுள்ளவற்கு காட்டலாம். விற்பனையாளர்கள் நிலவும் சந்தை நிலைமைகள், விற்பதற்கு சரியான நேரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் அறிவுறுத்துகிறார்கள். நல்ல நிலைமையில் விற்கும் வீட்டை வைதிருப்பது, வாங்குபோர்க்கு நல்ல ஆர்வத்தை ஏற்படுத்தும்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!