இடம் விற்க்காமல் இருக்க மூன்று முக்கிய காரணங்கள்

Please follow and like us:
onpost_follow

டாக்குமென்ட்ஸ் எல்லாம் சரியா இருந்தும், உங்கள்  இடம் நீண்ட காலமாக விற்க்காமல் இருக்க மூன்று முக்கிய காரணங்கள்

 

1. நிர்ணயிக்கப்பட்ட விலை

இடத்தின் விலை இடவிற்பனைக்கு முக்கிய பங்குவகிக்கும். விலை அதிகமாக இருப்பின் விற்பனை தாமதம் அல்லது விற்காமல் ஆகலாம். விலை – சந்தை மதிப்பைவிட குறைவாக இருப்பின், விற்பனையாலற்கு லாபத்தின் விகிதம் குறையலாம். ஆகையால் விலை நிர்ணயம் சரியாக செய்தல் அவசியம்.

பெரும் பான்மையான நில மற்றும் வீடு விற்பனையாளர்கள் தங்களின் இடத்திற்கு அருகில் விற்பனைக்கு உள்ள இடத்தின் சதுரடி மதிப்பை தனது இடத்தின் மதிப்பாக கருதி விலை நிர்ணயம் செய்கின்றனர், இது சிறந்த வழிமுறை அல்ல மாறாக உங்கள் இடத்திற்கு அருகாமையில் ஏதேனும் இடப்பரிவர்த்தனை ஆகிருப்பின், அதன் விலை மதிப்பையும், சந்தை நிலவரத்தையும் கருத்தில் கொண்டு உங்கள் இடத்தின் விலை நிர்ணயம் செய்தல் சிறந்தது.

2. பயன் படுத்தப்படும் ஏஜெண்டுகள் / ப்ரோகர்கள்

விற்பனைக்கு உள்ள உங்கள் இடம், சரியானவர்களின் மூலம் மற்றவர்களுக்கு அறிமுகபடுதப்படுகிறதா? என்பதில் கவனம் கொள்ளுதல் மிக அவசியம். இடம் வாங்குவது பலருக்கு வாழ்வில் ஒரு முறை நிகழும் நிகழ்வு, இடத்தினை வாங்குபவர்கள் நம்பிக்கையானவர்கள் மூலம் வாங்க பெரிதும் விருப்படுவர் அவ்வாறிருக்க உங்கள் இடத்தினை நம்பிக்கைக்குரியவர்களின் மூலம் அறிமுகப்படுத்துவது மிகவும் அவசியம். தவறான நபர்களினால், உங்கள் விற்பனை பாதிக்கப்படலாம்.

3.  இடத்தினை விற்க மேற்க்கொள்ளபப்படும் அணுகுமுறை

நீங்கள் இடத்தினை விற்க மேற்கொள்ளும் அணுகுமுறையை காலத்திற்கேற்ப மாற்றிகொண்டீர்களா? விற்க உள்ள உங்கள் இடத்தினை, மற்றவர்களிடம் தெரியபடுத்துவது, ப்ரோகர்களிடம் தெரியபடுத்துவது நல்ல வழிமுறையாக இருப்பினும், இவை மட்டுமே சிறந்த முறை அன்று. வளர்ந்து  உள்ள தொழில் நுட்பத்தையும்(டெக்னாலஜி), தொலைத்தொடர்பையும்  பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் இதனில் தேர்ச்சி பெறாதவராக இருப்பின் – இதனை தொழிலாக கொண்டவரை அணுகுங்கள்.

தொலைத்தொடர்பும், தொழில்நுட்பமும் அறிந்தவர்களாக இருந்தாலே போதுமே, ஏன் இதனை தொழிலாக கொண்டவரை அணுக வேண்டும்? தொழில்நுட்பமும், தொலைத்தொடர்பும் மற்றும் அல்லாது இதனை தொழிலாக கொண்டவர்கள், உங்கள் இடத்தினை சிறந்த முறையில் மற்றவர்களுக்கு அறிமுகபடுத்துவதுடன் நில மற்றும் வீடு விற்பனைக்கான சட்ட திட்டங்கள், உங்கள் இடத்தின் விலை நிலவரங்கள், முதலீட்டாளர்களை அறிந்திருப்பர்.

உங்கள் முயற்சி வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!