பட்டா என்றால் என்ன? அதன் அவசியங்கள்

Please follow and like us:
onpost_follow

இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டும் இல்லாமல், சொத்து பரிமாற்றம் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக மாறியிருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் இருந்தே சொத்துப் பரிமாற்றங்களை ஆவணப்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன. விற்பவற்கும் வாங்குபவர்க்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, , அரசு பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி பத்திரப்பதிவு தொடர்பான பணிகளை முறைப்படுத்தி வருகின்றனது.

பட்டா என்றால் என்ன?

அவ்வாறு முறை படுத்தப்பட்ட, வருவாய் துறை நிருவகித்து வரும், நில உடைமை தகவல்களை பாதுகாக்கும் துறையில் இருந்து, ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளதென்று பெறப்படும் ஆவணத்தகவலே பட்டா. இத்தகவலானது பெரும்பாலும், “நிரந்தர நிலப் பதிவிலிருந்தும்’’ , “டவுன் சர்வே லேண்ட் பதிவேட்டிலிருந்தும்’’ பெறப்படும். பட்டாவில் பல வகைகள் உள்ளன, மேற்கூறப்பட்ட, ”நிரந்தர நிலப் பதிவிலிருந்தும்’’ , “டவுன் சர்வே லேண்ட் பதிவேட்டிலிருந்தும்’’ பெறப்படும் பட்டாவைப்பற்றியது இப்பதிவு.

ஏன் பட்டா ?

பட்டா – பெரும்பாலான சமயங்களில், சட்டப்பூர்வமான உடைமை என்பதை நிறுவ முக்கிய ஆவணமாக கருதப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, ஒருவரின் பெயரிலோ (தனிப்பட்டா) அல்லது சிலரின் பெயரிலோ (கூட்டுப்பட்டா) பட்டா வழங்குதல்/உள்ளது என்பது, அவர் அல்லது அவர்கள்  அந்த நிலத்தின் உரிமையாளர் என்பதை குறிக்கும். ஆனால், பட்டாவினை மட்டுமே கொண்டு ஒருவர் நிலத்தின் உரிமையாளர் என்று உறுதி செய்தல் தவறு.

யார் பட்டா வழங்குவது ?

அரசு, வழக்கமாக அரசு ஊழியர்களான தாஸில்தார்கள் மூலமாக பட்டா வழங்கும். சூழ்நிலைகளை பொறுத்து, மற்ற அரசு அதிகாரிகளும் பட்டா வழங்க அதிகாரம் அளிக்கப்படுகிறார்கள். உதாரணமாக சிலமாவடங்களில் VAO பட்டா வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.

எந்த சொத்திற்க்கு பட்டா அவசியம் ?

உங்கள் சொத்தினில் நீங்கள் குடியிருப்பின், இடம் உங்கள் பாத்தியத்தில்  உள்ளது என்பதை உறுதி கூறலாம், இருப்பினும் மிகவும் அங்கீகரிகப்பட்ட முறை பட்டா வைத்திருப்பதே. காலி இடங்களாக இருப்பின், உங்கள் பாத்தியத்தை நிரூபிக்க இயலாது, ஆகையால் இடம் உங்கள் வசம் உள்ளது என்பதை உறுதி செய்ய பட்டா மிகவும் அவசியம் (வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் கவனத்திற்கு). அணைத்து சொத்திற்கும் பட்டா வைத்திருப்பது இல்லையெனின் பெற்றுக்கொள்வது பாதுகாப்பான வழிமுறை.

பட்டா வாங்குவதற்கான வழிமுறை என்ன?

எந்த சூழ்நிலைகளில் பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்?

அடுக்குமாடி குடியிருப்பில் ஃபிளாட் (flat) உள்ளவர்களுக்கு, பட்டா தேவையா? மற்றும் சில விபரங்கள், வரும் வாரங்களில் பார்க்கலாம்.

உங்கள் செயல்கள் வெற்றி அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்த்கள்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!