நிலம் vs அடுக்குமாடி குடியிருப்புகள்

Please follow and like us:
onpost_follow

தமிழகம் முழுக்க நகர்ப்புறங்களில் நிலங்களின் விலை விண்ணைத் தொட, சொந்த வீட்டுக் கனவு தகர்ந்த நிலையில் இருந்த நடுத்தர மக்களின் கனவுகளை நினைவாக்க வந்தவையே அடுக்குமாடி குடியிருப்புகள். ஆனால் இன்று கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வினால், அடுக்குமாடி குடியிருப்பின் விலைகளும் அடுக்குமாடியை போன்றே உயர்ந்து நிற்க, சொந்த வீடு கனவு கைகெட்டா  கனியாக மாறிக்கொண்டு இருக்கிறது. கடந்த 2000-ம் ஆண்டில் ஒரு சதுர அடி கட்டடம் கட்ட சுமார் 420-450 ரூபாய் செலவானது, இன்றைக்கு அது சுமார் 1,400-1,600 ரூபாயாக உயர்ந்துள்ளது. நிலம் vs அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சிறு ஆய்வு.

விவரம்மனை/நிலம்அடுக்குமாடிக் குடியிருப்பு / அபார்ட்மன்ட்
பங்குபெரும் பாலும் நிலம் வாங்குபவர்கள் (ஒருவர் அல்லது இருவர்) நிலத்தின் உரிமையாளர்களாக / பங்குதாரர்களாக இருப்பர்.அடுக்குமாடி குடியிருப்பு பொறுத்த வரை, அக்குடியிருப்பின் நிலத்தின் ஒரு மிகச்சிறு பகுதியே பங்காக கிடைக்கும். (UDS – Undivided Share). நிலத்தின் பங்குதாரர்கள் ஐம்பது – நூற்றுகணக்கில் இருப்பர்
விலைவட்டாரம், நில அமைப்பு, நில அளவு, நிலம் எளிதில் கிடைக்ககூடிய தன்மையை பொருத்தது.வட்டாரம், அடுக்குமாடிக் குடியிருப்பின் அமைப்பு, அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைக்கப்படகூடிய சேவைகள், கட்டுமான உள்ளமைப்பு மற்றும் வெளி வடிவமைப்பு, கட்டுமானர் தரம் (Brand) பொருத்தது.
சேவைகள்

(விளையாட்டுதிடல், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், போன்றவைகள்)
விளையாட்டுதிடல், பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், போன்றவைகள்
நிலத்தினை பொறுத்தவரை அந்த வட்டாரத்தை சார்ந்ததே
சில சேவைகள் ஒருங்கிணைந்தே இருக்கும்.
மாத வருமானம்கட்டிடம் அல்லாமல், வெறும் நிலத்தினில் இருந்து வரும் வருமானம் குறைவு/இல்லை.சரியாக முன்பே திட்டமிட்டால், அபார்ட்மன்ட் பெறப்பட்ட தேதியில் இருந்து வருமானம் ஈட்டலாம்.
வங்கிக்கடன்

(அறிவுருத்தபடவில்லை)
நிலத்திற்கு வங்கி கடன் வழங்குதல் சற்றே கடினம்.நிலங்களை காட்டினும், வங்கி கடன் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு எளிதில் கிடைக்கும்.
அபாயம்வில்லங்கம் மற்றும் வேறு எந்த பிரச்னைகளும் இல்லாமல் இடம் வாங்குவது மிகவும் அவசியம், பிரச்சனைகுறிய இடத்தினை வாங்கிவிட்டால் அதனில் இருந்து வெளிவருவது சுலபமானது அல்லபெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பின் நிலத்தினில் வில்லங்கம் என்பது இருக்காது, தரத்தின் அடிப்படையில் சிறந்த கட்டுமானஸ்தர்களை தேர்வு செய்தல் அவசியம்.
மதிப்புக்கூடுநகரங்களில் அதிகரிக்கும் நில பற்றாக்குறை, நீண்ட காலங்களில் நிலம் மதிப்பு இழக்காது இருக்கும் தன்மை, நிலம் உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வீட்டினை கடிக்கொள்ளுதல், போன்ற காரணங்களினால் நிலங்களின் மதிப்பு விரைவாக உயர்ந்துவிடும்அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவோர் தங்களது முதலீட்டின் பெரும் பகுதியை கட்டுமானத்திற்கும், மற்றும் வடிவமைக்கப்பட்டுள்ள சேவைகளுக்கும் சென்று அடையும். கட்டிடத்தின் காலங்கள் குறிப்பிட்ட (60-70) வருடங்களாக இருப்பதினால், கட்டிட தேய்மானதிர்கேற்ப கட்டிடத்தின் விலை இறங்கும். நிலத்தினை போன்று பன்மடங்காக அதிகரிக்காது.
எதிர்காலம்நிலத்திற்கான தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது, ஆகையால் விலை உயர்வு நிச்சயம்.அடுக்குமாடி குடியிருப்பில் வழங்கப்படும் நிலத்தின் அளவு மிகக்குறைவாக இருப்பதினால், நிலத்தின் விலையை கொண்டு மட்டும் விலை உயர்வடைவது கடினம், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருந்தால், கட்டிடத்தின் விலை சரியாமல் இருக்க வாய்ப்புள்ளது, இருப்பினும் கட்டுமானத்தின் தேய்வு காரணமாக விலை இறங்கும்.

பல வளர்ந்த நாடுகளில், அடுக்குமாடி குடியிருப்புகள், குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பிறகு அரசின் உதவியுடன் புதிப்பித்து கட்டி தரப்படும், ஆனால் இத்தகைய சூழ்நிலை நம்நாட்டில் இல்லை.

உங்களது வாழ்க்கை மாநகரங்களை சார்ந்தது என்பின், நிலத்தின் விலையினை கருத்தில் கொண்டு (நல்ல இடங்களில் நிலம் வாங்க இயலாத நிலையில்), அடுக்குமாடி கட்டிடங்களை வாங்குவது சரியானது. நீண்ட கால அடிப்படையில், உயர்ந்த குடியிருப்பில் முதலீடு செய்தல் என்பது சற்றே யோசனைக்குரிய செயல்.

வில்லங்கம் இல்லாமல் நிலம் வாங்குதல், பின்பு அணைத்து அரசு அனுமதியும் பெற்று, வாங்கிய நிலத்தில் வீடு கட்டுதல் என்பது சற்றே கடினமாக இருப்பினும், நீண்ட காலத்தில் சிறந்த பயனளிக்கும்.

என்றும் உங்கள் சேவையில்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!