வங்கியில் இருக்கும் உங்கள் பணம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது?

Please follow and like us:
onpost_follow

மத்திய அரசு, பார்லிமென்டில்,  ஆகஸ்ட் 10, 2017இல் மக்களவையில் தாக்கல் செய்த எப்.ஆர்.டி.ஐ ., (நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு – F.R.D.I  The Financial Resolution and Deposit Insurance) என்ற சட்ட மசோதா, பொருளாதார நிபுணர்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே, சலசலப்பை உண்டாக்கியுள்ளது. ஏன் இந்த மசோதா சலசலப்பை ஏற்படுதிள்ளது, வங்கியில் இருக்கும் உங்கள் பணம் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது ? ஒரு சிறு ஆய்வு

இம்மசோதா, வராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால், வங்கி, காப்பீட்டு நிறுவனம், நிதி சேவை நிறுவனம், கூட்டுறவு வங்கி மற்றும் பங்குச் சந்தை நிறுவனங்கள் திவாலாகும் சூழல் உருவானால், அவற்றை மீட்கவோ, மூடவோ வழிசெய்கிறது.

தற்போது, வங்கிகளில், வாடிக்கையாளரின் சேமிப்புத் தொகைக்கு,  டி.ஐ.சி.ஜி.சி (ரிசேர்வ் வங்கியின் ஒரு கிளையான, டி.ஐ.சி.ஜி.சி., சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம்  – DICGC, Deposit Insurance and Credit Guarantee Corporation) என்ற கழகத்தில் காப்பீட்டு தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக வங்கிகள், அக்கழகத்திற்கு, ஆண்டுக்கு, 3,000 கோடி ரூபாய் வரை, காப்பீட்டு தொகை செலுத்துகின்றன, ஆகையால் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளை திவாலாக விடுவதில்லை. அதுபோன்ற நிலை வந்தால் வேறு வங்கிகளுடன் இணைக்கிறது. 1969 முதல் இதுவரை 26 தனியார் வங்கிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட வங்கிகளை ரிசர்வ் வங்கி காப்பாற்றியுள்ளது.

ஆனால், புதிய மசோதாவில், டி.ஐ.சி.ஜி.சி.,யை (DICGC) கலைத்துவிட்டு, ‘’தீர்வு கழகம் –  Resolution Corporation’’எனும் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இந்த ‘’தீர்வு கழகமானது’’ , வங்கியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும். வங்கிகள் அல்லது வேறு நிறுவனங்கள் திவாலாகும் சூழலில், வாடிக்கையாளர் சேமிப்பு தொகையை, ‘‘தீர்வுக் கழகம்’’ வாயிலாக பயன்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளர்களுக்கு, சிறு தொகையை தந்து, மீதித் தொகையை, சில ஆண்டுக்கு பின் பெறக்கூடிய பங்கு மதிப்பாகவோ, பத்திரமாகவோ கொடுப்பர். ‘பெயில் இன்’ (Bail in) என்ற இந்த அம்சம் தான், பிரச்னைக்கு காரணம். சைப்ரஸ் நாட்டில் இச்சட்டம் அமலான பின் மக்களின் சேமிப்பில் 47.5 சதவீத தொகை மட்டும் தான் கிடைத்தது என்பது குறிபிடத்தக்கது. தங்கள் சேமிப்புத் தொகையை, வாடிக்கையாளர்களால், எடுக்க முடியாமல் போகலாம்; வங்கிகள் மூடப்பட்டால், மீதி தொகைக்கு உத்தரவாதம் கிடைக்காது என்ற அச்சம், பரவலாக எழுந்துள்ளது.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர், அருண் ஜெட்லி ஆகியோர், ‘மக்களின் சேமிப்புக்கு, மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும்.
வங்கிகளை பலப்படுத்தவே, 2 லட்சத்து, 11 ஆயிரம் கோடி ரூபாய், முதலீடு செய்ய உள்ளோம். அதனால், அச்சம் வேண்டாம். இம்மசோதாவை, பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு, என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க, மத்திய அரசு தயாராக இருக்கிறது’ என, தெரிவித்துள்ளனர்.

வங்கிகளை சார்ந்து அணைத்து பரிவர்த்தனைகளும் (Cashless Transactions) இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்த அரசு, தற்போது வங்கிகளின் நம்பிக்கை தன்மை குறையும்  விதத்தில் இவ்வாறு செய்வது மக்களிடையே அதிற்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கியில் கடன் வாங்கியவனை விட்டுவிட்டு, பணம் சேர்த்து வைப்பவனின் பணத்தை, பங்கு மதிப்பாகவோ, பத்திரமாகவோ கொடுக்க முன் வருகிறது அரசு.

கான மயிலாட, கடன் வந்து மேலாட, வாங்கியவன் கொண்டாட, கொடுத்தவன் திண்டாட, தயவுசெய்து கடன் கேட்காதீர்கள்’’ என்ற வாசகத்தை வங்கியில் வைக்கலாம்.

வைக்க தெரியாமல் வைக்கோல் போரில் வைத்த கதை ஆகிவிடும் போல் இருக்கிறது நம் கதை.

பார்லிமென்ட் கூட்டுக் குழு ஆய்வில் இருக்கும் இம்மசோதா, இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!