தவிர்க்க வேண்டிய தவறு – வில்லங்க சான்றிதல்

Please follow and like us:
onpost_follow

வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர் சிலர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் இருப்பின் சொத்தினை வாங்குபவர்கள்  பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். இவற்றை தவிர்க்க வில்லங்க சான்றிதல் எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

சொத்துகளை வாங்குவதற்கு முன்பு அந்தச் சொத்துகள் குறித்த ஆவணங்களைச் சரிபார்ப்பது மிக அவசிய தேவையாகிவிட்டது. சரி பார்க்க வேண்டிய ஆவணங்களில் முக்கிய ஒன்று வில்லங்க சான்றிதல். ஒரு சொத்து தொடர்பாக ஏதேனும் வில்லங்கங்கள் இருக்கின்றனவா என்பதை இந்த வில்லங்கச் சான்றிதழ் காட்டிக்கொடுத்துவிடும்.

வில்லங்க சான்றிதழில் – Encumbrance Certificate:

வில்லங்க சான்றிதழில், சர்வே எண், விற்பவரும் வாங்குபவரும் செய்துகொண்ட ஒப்பந்தம், செய்துகொண்ட தேதி, பதிவுசெய்யப்பட்ட தேதி, பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம், சொத்தின் மதிப்பு, சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர், பதிவுசெய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண் போன்ற விபரங்களை கொண்டு இருக்கும். சொத்தை அடமானம் வைத்து ஏதேனும் கடன் வாங்கப்பட்டிருந்தாலும், சொத்தின் பேரில் பவர் ஆஃப் அட்டானி எழுதிக் கொடுத்திருந்தாலும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பவர் ஆஃப் அட்டர்னி என்பது சொத்தின் உரிமையாளர், சொத்தை விற்கும் உரிமையை ஒருவருக்கு அளிக்கும் ஒப்பப் பத்திரம் எனலாம். இந்த பவர் ஆஃப் அட்டர்னியை வைத்து பல முறைகேடுகள் நடைபெறுவதினால் 2009 நவம்பரில் பவர் ஆஃப் அட்டர்னி பதிவுசெய்யும் முறை வந்தது,

உதாரணமாக சொத்தின் உரிமையாளர், 2009-ம் ஆண்டுக்கு முன்பு ஒருவருக்கு பவர் ஆஃப் அட்டர்னியை எழுதிக் கொடுத்தார் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஆண்டிலேயே பவர் ஆஃப் அட்டர்னியைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார். ஆனால், இந்தப் பழைய பவர் ஆஃப் அட்டர்னி பத்திரத்தை வைத்து அந்த நபர் அந்தச் சொத்தை ஏமாற்றி விற்கும் வாய்ப்புள்ளது. வெறும் பவர் ஆஃப் அட்டர்னியை மட்டும் நம்பி இடத்தை வாங்கிவிடக் கூடாது.

பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.

30 ஆண்டுகளுக்கு உட்பட்ட சொத்துகள் மட்டும்தான் கணினியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதனால் அதற்கு முன்பு உள்ள சொத்துகளுக்கு வில்லங்கச் சான்றிதழ் பெறக் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலும் வில்லங்க சான்று வேண்டின், கால தாமதத்தை பொருட்படுத்தாது அதனை பெறுவதே சிறந்த முறை.

நீங்கள் வாங்கும் சொத்து பதிவுசெய்யப்பட்டிருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலமும் வில்லங்கச் சான்றிதழ் பெற முடியும். இந்த சேவையை உங்களுக்காக எங்களால் செய்ய இயலும்.

எங்கள் உதவியுடன் இடம் வாங்குபவர்களுக்கு, நாங்கள் வில்லங்க சான்றிதல் மட்டும் இன்றி, இடத்தினில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை உறுதி செய்ய, வழக்கரிங்கரிடம் இருந்து சான்று பெற்று வழங்கப்படும். எங்கள் சேவை உங்களுக்கு தேவை இருப்பின் எங்களை அணுகுங்கள்.

உங்கள்  முயற்சிகள் வெற்றி அடைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!