நிலத்தில் முதலீடு – கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சில அம்சங்கள்

Please follow and like us:
onpost_follow

உலகம் முழுவதிலுமே நிலம் சார்ந்த மனை வணிகம் சிறந்தவொரு வியாபாரக்களமாக மட்டுமின்றி, முதலீட்டுக்களமாகவும் திகழ்கிறது. மற்ற வகை முதலீடுகள் எல்லாம் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகையில், நிலத்தில் முதலீடு செய்யும் முறைக்கு மட்டும்தான் ஆங்கிலத்தில் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் என்ற பெயர் இருக்கிறது. இது நிலம் சார்ந்த முதலீட்டின் சிறப்பை உணர்த்துகிறது. அதேவேளையில், பெயரில் ரியல் அதாவது உண்மையைத் தாங்கி நின்றாலும்கூட, யதார்த்தத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பல பொய்களைத் தாங்கி நிற்கும் துறையும் இதுதான். ஆகையால், இந்த முதலீட்டில் கூடுதல் எச்சரிக்கையும் அவசியம்.

நிலத்தில் முதலீடு செய்யும் முன், கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய சில அம்சங்கள்

  • தாய்ப்பத்திரம் கடந்த 30 ஆண்டுகளுக்குச் சரி பார்க்கப்பட வேண்டும்.
  • தற்போது உரிமையாளாரின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் தற்போதைய விற்பனையாளரின் பெயரில் பட்டா உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • கடந்த 30 ஆண்டுகளுக்கான சொத்தின் வில்லங்கச் சான்றிதழைச் சரிபார்க்க வேண்டும். சொத்தின் மேல் எந்த ஒரு வில்லங்கமோ அல்லது நீதிமன்ற ஆணையின் இணைப்போ இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  •  நிலம் அங்கீகரிக்கப்பட்ட மனையில் உள்ளது என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நகர ஊரமைப்புத் திட்ட இயக்ககம் (DTCP) அல்லது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்க வேண்டும். பஞ்சாயத்துத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மனையாக இருக்கக் கூடாது.
  • அங்கீகரிக்கப்பட்ட மனையின் நிபந்தனை ஏதேனும் இருந்தால் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்று சரிபார்க்க வேண்டும்.
  • மனை வாங்கும் முன் அந்த மனையின் மீது அரசாங்கத்திடமிருந்து கட்டுபாடுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ளவை சில முக்கிய அம்சங்கள் மட்டுமே, அணைத்து அம்சங்களும்  அல்ல. நிலைத்தல் முதலீடு செய்வது என்பது, ஒரு கணிசமான முதலீட்டை கொண்டது. பெரும்பாலாநோற்கு இது வாழ்வில் ஒரு முறை அல்லது இரு முறை நிகழும் அம்சம், அவ்வாறு இருக்க, சிக்கல்களை தவிர்க்க, இதனை தொழிலாக கொண்டு இருபவர்களை சார்வது சிறந்தது.

தரமான சேவை பெற எங்களை அணுகுங்கள்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp