வெளிநாடுகளில் இருந்தவாரே இந்தியாவில் சொத்து வாங்குவது எப்படி?

Please follow and like us:
onpost_follow

நிலம் வாங்குதல் என்பது இதனில் அனுபவம் இல்லாத பலருக்கு புரியாத புதிர். நம் விருபத்திற்கு ஏற்றது போன்று இடம் அமைவதும் பின்பு அதனில் எந்த வில்லங்கமும் இன்றி இருக்கிறதா என்று சரி பார்த்து வாங்குவதும் சற்றே நேரம் கொள்ளும் விஷயம். வெளிநாடுகளில் இருந்து குறைந்த நாட்கள் விடுமுறையில் வரும் நம்மவர்கள் அல்லது விடுமுறை கிடைக்காத சூழ்நிலைகளில் இருப்போர் – பொது அதிகாரம் முறையை பயன் படுத்தி கொள்ளலாம்.

வெளிநாடுகளில் இருக்கும் இந்திய குடிமக்கள் இந்தியாவில் சொத்து வாங்கவோ, பராமரிக்கவோ தங்களால் நேரில் வந்து செயலாற்ற முடியாத போது தங்களுக்கு நம்பிக்கையான நபருக்கு பொது அதிகாரம் (General Power) வழங்கலாம். இவ்வாறு அதிகாரம் வழங்கப்பட்டவரை ஜெனரல் பவர் ஏஜென்ட் என்று அழைப்பர்.

பெரும்பாலும் இந்தியாவில் விடுமுறையில் இருக்கும் போதோ இங்குள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் வைத்து நம்பிக்கையானவருக்கு பவர் கொடுத்தல் சிறந்தது, வெளிநாடுகளில் இருந்து பவர்கொடுத்தல் மிகவும் எளிதானது அல்ல (பொது அதிகாரம் பத்திரம்). தவிர்க்கமுடியவில்லை என்றால் வெளிநாட்டில் இருந்தபடியே இந்தியாவில் இருப்பவருக்கு பவர் கொடுக்கலாம். பவர் கொடுக்கும் போது, தூதரக அலுவலர் அல்லது நோட்டரி பப்ளிக் கையெழுத்து இட வேண்டும்.

வெள்ளை பேப்பரில் தெளிவாக எழுத வேண்டியவைகளை டைப் செய்து ஆவணத்தை உருவாக்க வேண்டும். இதற்கு முத்திரத்தாளை பயன்படுத்த அவசியம் இல்லை. காமன்வெல்த் நாடுகளாக இருப்பின் நோட்டரி பப்ளிக் கையெழுத்து செல்லும். மீத நாடுகளில் இந்திய ஹை கமிஷன் கவுன்சில் அதிகாரி முன்னிலையில் பவர் கொடுப்பவர் கையெழுத்து இட வேண்டும்.

கையெழுத்து இட்ட ஆவணத்தை இந்தியாவில் உள்ள உறவினருக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் உங்கள் நம்பிக்கைக்குரியவர், ஆவணம் கிடைத்த மூன்று மாதங்களுக்குள் இங்கு இருக்கிற மாவட்ட இணை சார்பதிவகத்தில் “அட்ஜூடிகேட்” செய்ய வேண்டும். “Adjudication” என்பது மேற்படி பத்திரத்தை இந்தியாவில் உபயோகித்து கொள்ளும் உரிமையை பெறுவது ஆகும்

மாவட்ட பதிவாளர் வெளிநாட்டில் இருந்து வந்த ஆவணத்தை சோதனையிட்டு, தேவையான முத்திரைதாளை பெற்று பவர் வாங்கியவரின் போட்டோவை அதில் ஒட்டி, சான்று செய்து Adjudication தருவார்.

பவர் கொடுக்கும் போது பெரும்பாலும் சொத்து விற்கலாம் என்றும் தனி நபரிடம் அடமான கடன் வாங்கலாம் போன்ற அதிகாரங்களை தவிர்த்தல் நலம். வங்கியில் கடன் வாங்குபவராக இருப்பின், உங்கள் பெயரில் வங்கி கடன் வாங்க தேவையான ஆவணங்களை கையழுத்து இட உங்கள் பவர் ஏஜெண்டிற்கு அதிகாரம் கொடுக்கலாம்.

பவர் பத்திரம் ஒன்று தெளிவாகவும், பாதுகாப்பகவும் கொடுத்து விட்டால் இங்கு அடிக்கடி வர தேவையில்லை. இங்கும், அங்கும் உங்கள் பணிகள் தடையில்லாமல் நடக்கும்.

Join The Discussion

One thought on “வெளிநாடுகளில் இருந்தவாரே இந்தியாவில் சொத்து வாங்குவது எப்படி?”

  • jahir brunei

    Fantastic info

    Reply

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!