வில்லங்க சான்றிதல் பலன் மற்றும் அதன் வகைகள்1

Please follow and like us:
onpost_follow

வில்லங்க சான்றிதல் பலன் மற்றும் அதன் வகைகள்

“ENCUMBRANCE CERTIFICATE”  சுருக்கமாக EC என்றும், தமிழில் “வில்லங்க சான்றிதழ்”  என்று புழக்கத்தில் இருக்கிறது. EC என்பது ஒரு சொத்தில் நடந்த பரிமாற்றங்களை தேதி வாரியாக  யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாறி இருக்கிறது, அதனுடைய ஆவண எண் நான்குமால் எல்லை சொத்து விவரங்களை காண்பிக்கின்ற ஒரு ஆவணம் ஆகும்.

என்னவெல்லாம் EC யின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?

ஆவண எண் சரிபார்த்தல் – ஆவணங்கள் எல்லாம் உண்மையானதா என்று EC யில் வருகிற ஆவண எண்களை , கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.
உங்களுக்கு கிடைத்து இருக்கும் ஆவணங்கள் இல்லாமல் வேறு ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக கூடுதலாக இருந்தால் அதனை தெரிந்து கொள்ளலாம் .
கிரையம் (Sale), கிரையம் அக்ரிமெண்ட் , தானம், செட்டில்மெண்ட், விடுதலை பவர் பத்திரம் , அடமான கடன் பத்திரம் , போன்றவற்றை அதன் ஆவண எண் விவரங்கள் உடன் தெரிந்து கொள்ளலாம் .
பிளாட், வீடுகள் கட்டி கொடுக்கின்ற பில்டர்கள் , தங்களுடைய சொத்திற்கான (COMPLETION CERTIFICATE) OCCUPY CERTIFICATE, ECயில் ஏற்றி வைத்து இருப்பார்கள் , வீடு வாங்குவதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளலாம்.
கூட்டுறவு, வேளாண்மை சொசைட்டி, நிலவங்கியில் வாங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கி இருக்கிற கடன்களை EC மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நீதிமன்ற தடையாணை & உத்தரவுகள் இருந்தால் EC யில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு நில எடுப்பு , அரசு நில ஆர்ஜிதம் , போன்றவற்றை கூட சில நேரங்களில் EC யில் தெரிந்து கொள்ளலாம் .

EC யை 3வகையாக பிரிக்கலாம்;
ஆன்லைன் EC
கம்ப்யூட்டர் EC  (REGINET சேவை)
மேனுவல் EC

ஆன்லைன் EC:

சமீபகாலமாக EC யை இணையதளம் மூலம் எடுத்து கொள்ளலாம் (https://tnreginet.gov.in), கம்ப்யூட்டர் சென்டர்களில் ஆன்லைன் மூலம் EC எடுத்து கொள்கின்றனர் சிலர். ஆன்லைன் EC யில் சில நேரங்களில் தவறுதல்கள் ஏற்படுகின்றன, (என் அனுபவம்). அதனால் சொத்து வாங்கவோ அல்லது வேறு பரிமாற்றங்கள் செய்யவோ கம்ப்யூட்டர் EC அல்லது மேனுவல் மனு செய்து வாங்கவும். மேற்படி ஆன்லைன் EC யில் ‘QR’ கோடுடன் வருகிறது. அதன் மூலம் அந்த சான்றிதழின் மெய்தன்மையை அறிந்து கொள்ளலாம் .

கம்ப்யூட்டர் EC:

1980 முதல் அணைத்து பரிவர்த்தனைகளும் கணினி மயம் ஆக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகு பார்க்கபடுகிற EC, கம்ப்யூட்டர்  EC என அழைக்கபடுகிறது. இதனையும் இணையதளம் மூலமாகவே விண்ணபிக்கலாம். இம்முறையில் பெரும் ECயில்   சார்பதிவகத்தில் முத்திரையும், பதிவாளர் கையெழுத்தும் இருக்கும். லீகல் பார்க்கும் வழக்கறிஞர்கள் , கடன் கொடுக்கும் வங்கிகள், பெரும்பாலும் ஆன்லைன் EC யை விட இந்த EC யை தான் விரும்புகின்றனர்

மேனுவல் EC:

1980க்கு முன் நடை பெற்ற பரிவர்த்தனை அனைத்தும் மேனுவலாகவே பாதுகாக்க படுகிறது ஆகையால் கால கட்டங்களுக்கு முன் EC பார்க்க வேண்டும் என்றால், இந்த மேனுவல் EC தான் பார்க்க வேண்டும்.

சார்பதிவு அலுவலகத்தில் EC பார்த்து எழுதி கொடுக்கவே ஒரு சார்பதிவக பணியாளர் இருப்பார். அவர் ஒரு சொத்தில் நடந்து இருக்கும் பரிமாற்றங்களை ரெக்கார்ட்களில் பார்த்து கைகளால் எழுதி தருவார்.

இதிலும் சார்பதிவக முத்திரை மற்றும் சார்பதிவாளர் கையெழுத்து இருக்கும் . இது கம்ப்யூட்டர் ப்ரிண்டாக இருக்காது. ஏற்கனவே அச்சடித்து வைத்து இருக்கிற படிவத்தில் அவர்கள் எழுதி தருவார்கள்.

இறுதியாக அனைவரும் EC யை பற்றி நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் , நீங்கள் பணம் கட்டி சார்பதிவக அலுவலக ரெக்கார்ட்களில் உள்ள உங்கள் சொத்து  பரிமாற்றங்களை  EC யாக எடுத்து கொடுக்க சொல்லும் போது பதிவு துறை பிழையாக எடுத்து கொடுத்து, அதனை நம்பி நீங்கள் சொத்தை ஏதாவது பரிமற்றங்களுக்கு உட்படுத்தி நஷ்டமடைந்தால் பதிவு துறை பொறுப்பல்ல என்கிறது. அதனை EC யில் பின்பக்கத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எனவே EC க்கு அரசு ” ACCOUNTABILITY ”   எடுத்து கொள்வதில்லை , எனவே நீங்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!