சிட்டா, அடங்கல், அ – பதிவேடு, FMB – ஓர் பார்வை

Please follow and like us:
onpost_follow

“பட்டா” என்ற வருவாய் துறை ஆவணத்தை தவிர, சிட்டா, அடங்கல், அ – பதிவேடு, FMB ஆகிய ஆவணங்களும் நில பரிவர்த்தனைக்கு மிக முக்கியமானவை. இவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.

சிட்டா :

கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடுதான் . “சிட்டா” என்பது. இதில் யார் யாருக்கு எல்லாம் “பட்டா” கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கும். சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விபரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விபரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பட்டாவின் நம்பகத்தன்மையை சரிபார்கவே சிட்டா, எனவே உங்கள் கைக்கு வரும் பட்டாவை கிராம கணக்கில் இருக்கும் சிட்டா பதிவேட்டில் ஒப்பிட்டு சரி பார்த்து கொள்வதற்காக சிட்டா பதிவேடு இருக்கிறது.

தற்போது பட்டா ஆன்லைனில் பார்கோடு உடன் வருவதால் பட்டாவை உறுதி செய்து கொள்ள முடியும்! சிட்டாவும் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது , பட்டா ஒரிஜினலா என்று சோதிக்க சிட்டா வை பார்க்க வேண்டும்.

அடங்கல் :

மேல்கூறபட்டது போலவே கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் மற்றும்  ஒரு பதிவேடு ‘’ அடங்கல்’’ . கிராமத்தில் இருக்கிற எல்லா நிலங்களுக்கு மேல் இருக்கிற பயிர்கள் , செடிகள், மரங்கள், யார் பயிரிடுகிறார்கள், யார் அனுபவிக்கிறார்கள் என்ற விவரங்கள் பற்றி ஆண்டு தோறும் பதிவிட்டு எழுதி வைத்து இருப்பார்கள்

நிலம் வாங்கும் பொழுது அடங்கலை பார்ப்பதால் வேறு நபர் அதில் அனுபவம் கொண்டுள்ளனரா என தெரிந்து கொள்ள முடியும்.

அடங்கல் ஆவணத்தை வைத்து தான் நிலவள வங்கி , வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் பிற வங்கிகளில் விவசாயகடன் , விவசாய நகைகடன் , உரகடன் மற்றும் மானியங்கள் வழங்குகின்றனர் பட்டாவை பார்த்து அல்ல.

அ.பதிவேடு:

நிலையான, அடிப்படையான இப்பதிவேடு கிராமத்தைப் பற்றிய புல எண் வாரியான விவரங்களை கொண்டதாகும். ஒரு கிராமத்தின் முழு விஷயங்களையும் தன்மையையும் தெரிந்து கொள்ள பயன்படும் பதிவேடு இது. இப்பதிவேடு ஆண்டுதோறுமோ அல்லது அடிக்கடியோ மாறக்கூடிய ஆவணம் இல்லை! இது ஒரு நீண்ட கால பதிவேடு. பெரும்பாலும் கிராமத்தை ஒட்டு மொத்தமாக நிலஅளவை செய்து ரீசர்வே செய்தார்கள் என்றால் அப்போது மட்டுமே அ.பதிவேடு திருத்தப்படும். அல்லது மாற்றப்படும். இப்போது தமிழகத்தில் இருக்கிற அ.பதிவேடு 1980 முதல் 1987 வரை கிராம நிலங்களை நில அளவை செய்து புதிய சர்வே எண்கள் கொடுத்து உருவாக்கப்பட்டது

கிராமத்தில் நிலவகை மாற்றம் போன்றவைகளின் காரணமாக ஏற்படும் நிலையான மாறுதல்களுக்கு திருத்தங்கள் செய்து பதிவேட்டின் இறுதியில் ஆண்டு சுருக்கம் செய்யப்படும்.

சர்வே செய்யபட்ட காலத்தில் நிலத்தை அனுபவித்த உரிமையாளர் பெயர், அ.பதிவேட்டில் இருக்கும். அதனை வைத்து தற்போதைய உரிமையாளர்க்கும் அ.பதிவேட்டில் இருக்கும் உரிமையாளருக்கும் இடையே லிங்க் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளமுடியும். அதன்மூலம் நிலத்தில் பல சட்ட சிக்கல்களை தவிர்த்து விடலாம்.

அதுபோல் அ.பதிவேடு உருவாகும் காலத்திற்கு முன் அந்த இடத்திற்கு என்ன சர்வே எண், ஒரு நிலத்திற்கு இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

 

FMB:

புலப்பட புத்தகம் FMB என்று அழைக்க்கபடுகிறது ஆகும். கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் சர்வே எண் வாரியாக நில அளவை துறையினரால் வரையப்பட்டு புத்தகமாக போட்டு வைத்து இருப்பர். ஓவ்வொரு பக்கத்திற்கும் ஒரு சர்வே எண்ணின் வரைபடம் போடப்பட்டு இருக்கும் . இந்த வரைபடமே FMB ஆகும்

நீங்கள் வாங்கும் இடத்தை அளந்து பார்க்கும் பொழுது, ஏதாவது பவுண்டரி சிக்கல்கள் இருப்பின் இந்த FMB மிக முக்கியமாக பயன்படும்.

நாம் விலை மதிப்புள்ள வீடு மனைகளை வாங்கும் போது நிச்சயம் நம் மனையின் படமும், சர்வே எண்ணும் புலபடத்தில் இருக்கிறதா என்று கவனம் கொள்ளுதல் அவசியம்.

உங்கள் முயற்ச்சிகள் வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்!! எங்கள் சேவை உங்களுக்கு வேண்டுமெனின் எங்களை அணுகவும்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!