வழிகாட்டி மதிப்பு அறிந்துகொள்ளுங்கள்

Please follow and like us:
onpost_follow

நிலங்களை வாங்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை, முத்திரைத்தாள் வாங்குவது மூலம் செலுத்துவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் என்பதை இந்த வழிகாட்டி மதிப்பின் மூலம் கணக்கிட இயலும். இடத்தின் விலை மதிப்பைவிட குறைவான விலைக்கு வரி செலுத்துவதை தவிர்க்கவும் அதனால் அரசிற்கு இழப்பு ஏற்படாமல் இருக்கவும் அமல்படுத்த பட்டது தான் அரசு வழிகாட்டி மதிப்பு.

நிர்ணயம் செய்யபட்ட வழிகாட்டி மதிப்பின் படி, ஒரு இடத்தின் மொத்த மதிப்பில்  7% முத்திரைத்தாள்கள் வாங்கிவிட வேண்டும் (விற்பனைக்கு, Sale deed ). வழிகாட்டி மதிப்பிலிருந்து குறைவாக பத்திரம் செய்தல் இயலாது (சில விதிவிலக்குகள் உள்ளன) ஆனால் அதிகமாக மதிப்பை காட்டி பத்திரப்பதிவு செய்யலாம்.

கிராமப்பகுதிகளில் கிராம நத்தம், & மனைக்கட்டு பகுதிகளில் வழிகாட்டி மதிப்பு அதிகமாகவும், வயற்காடு, கழனிகளில் குறைவாகவும் இருக்கும். நகரப்பகுதிகளில் அகல மனை சாலைகளில் உள்ள இடங்களில் அதிக வழிகாட்டி மதிப்பும், குறுகிய சந்துகளுக்கு குறைந்த மதிப்பும் இருக்கும். 12. 2012 ல் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்ட போது நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் வசதிகள் அடிப்படையில் (CLASS) தரம் பிரிக்கப்பட்டன. அவை வணிகநிலம் முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம், என பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல் வழிகாட்டி மதிப்புகள் ஏறியும், குறைந்தும் இருக்கும். வழிகாட்டி மதிப்புகளை கிராமப்பகுதிகளில் புல எண்கள் அடிப்படையிலும், நகரப்பகுதிகளில் தெரு பெயரின் அடிபடையிலும் நிர்ணயிக்கின்றனர்.

உங்கள்/ தெரு / புல எண்ணில் பக்கத்து நபர் வழிகாட்டி மதிப்பை விட அதிகமாக பத்திரத்தில் காட்டி பத்திரம் செய்தால் அதுமுதல் பெரும்பாலும் அந்த அதிக மதிப்புதான் அந்த பகுதியின் வழிகாட்டி மதிப்பு ஆகும். சிலர் வங்கி கடனுக்காக இடத்தின் மதிப்பை உயர்த்தி காட்டுவர்.

அரசு நிர்ணயித்து இருக்கும் வழிகாட்டி மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது என்று இடம் வாங்கும் நபர் உணரும் பட்சத்தில், தாங்கள் விரும்பும் மதிப்பில் முத்திரைத்தாள்கள் சட்டம் 47 (A) ன் கீழ் பத்திரம் பதிவு செய்யலாம். பிறகு மாவட்ட பதிவாளர் நேரிடையாக வந்து கள விசாரணை செய்து, பிறகு பத்திரம் இடம் வாங்கியவருக்கு கொடுக்கப்படும். அதுவரை மேற்படி பத்திரம் நிலுவையில் (Pending) இருக்கும். பதிவாளார் வந்தோ, (அ) வராமலோ உங்கள் பத்திரம் ரொம்ப காலம் உங்களுக்கு கிடைக்காமல் நிலுவையில் இருந்தால், அவற்றை பதிவுதுறை பொதுமக்களுக்கு கொடுக்கும் “சமாதான் திட்டம்” மூலம் அதற்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி பெற்று கொள்ள இயலும்.

புதிய வீட்டு மனை பிரிவுகளை அமைத்தாலும், அந்த இடம், பதிவுத்துறை ஆவணங்களின், வழிகாட்டிமதிப்பு வயல் நிலத்திற்கான மதிப்பாகத்தான் இருக்கும். அதனை மனை மதிப்பாக Conversion செய்ய புதிய வழிகாட்டி மதிப்பு (Fixation) செய்ய மாவட்ட பதிவாளருக்கு மனை பிரிவு உருவாக்குவர் மனு செய்தால், மாவட்ட பதிவாளர்கள் ஆய்வு செய்து மதிப்பு நிர்ணயிப்பார்.

தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு  9ஜூன் முதல் வழிகாட்டி மதிப்பை 33% குறைத்தது என்பது குறிபிடத்தக்கது/

 

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!