தனி மனைகளுக்கான DTCP அங்கீகாரம் பெறுவதற்கான முறை

Please follow and like us:
onpost_follow

DTCP அங்கீகாரம் பெறுவதற்கான முறை

சென்னை உயர்நீதிமன்றம் 2016அக்டோபரில் கடந்த 30ஆண்டுகளாக வரன்முறை செய்யாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த பஞ்சாயத்து அங்கீகார மனைகள், அன்அப்ரூவ்டு மனைகள், NOC மனைகள் ஆகியவற்றை  தடைசெய்தது. தடையின் காரணமாக மனைபிரிவுகளை  வாங்கவோ விற்கவோ முடியாமல், பத்திரபதிவு அலுவலகங்களில் பதிவும் செய்யமுடியாமல்  பொதுமக்களும், ரியல் எஸ்டேட்  தொழில் செய்பவர்களும் மிகுந்த துயருக்கு உள்ளானார்கள். ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்கள், பொதுமக்களின்   தொடர் கோரிக்கைகளை ஏற்று  2017 இறுதியில் அரசு மனை பிரிவுகளை வரன்முறை செய்ய உத்தரவிட்டது. (அரசாணை எண்.78)

அரசாணையை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்களும், மற்றும் வரன்முறை கட்டணம் அதிகமாக இருப்பதனை தொடர்ச்சியாக பொதுமக்களும், ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்களும் சுட்டிக்காட்டியதால், கோரிக்கைகள் ஏற்று அரசாணை எண்.78ல்  திருத்தம் கொண்டுவரப்பட்டது.

வரன்முறைபடுத்துதலுக்கான கால அவகாசத்தை  அரசு இதுவரை  நான்கு முறை பொதுமக்களின் பயணிற்காக  நீட்டி தந்துள்ளது.

வரன்முறை செய்தலின் செயல்முறை:

மனைகள் இரண்டு முறைகளில் வரன்முறைபடுத்தபடுகிறது.அ)புரோமொட்டர் வரன்முறைபடுத்துதல் ஆ)மக்கள் வரன்முறைபடுத்துதல். மனைபிரிவுகளை உருவாக்குபவர் தன் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்தது போக விற்பனையாகாமல் மீதி இருக்கும் மனைகளை வரன்முறைசெய்தல் புரோமோட்டர் ரெகுலேஷன் ஸ்கீம் ஆகும், மனைகளை வாங்கிய பொதுமக்கள் தங்கள் மனைகளை மட்டும் வரன்முறைபடுத்துதல் இன்னொரு வகையாகும்

  • முதலில் மக்கள் மனைகள் வரன்முறைபடுத்துதலை பார்ப்போம்.முதலில் DTCP. அலுவலகம் சென்று உங்களது மனைகளுக்கு வரன்முறைபடுத்துததல் அங்கீகாரம் கிடைக்குமா?அல்லது மேற்படி மனைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட பகுதிகளில் வருகிறதா (மலை,நீர்நிலை பகுதிகள் போன்று, தடை செய்ய பட்ட பகுதிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காது) போன்ற நிலவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
  • பிறகு ஆன்லைனில் www.tnlayoutreg.in என்கிற வலைத்தளம் லிங்கில் ஆன்லைன் மனு செய்தல் வேண்டும். மனு செய்தலுக்கு முன்பாக, வலைத்தளத்தில் மனு செய்பவர் தன்னை ”For Application in DTCP Area” என்ற லிங்கில் பதிவு செய்தல் அவசியம், பதிவு செய்து ”User Id and Password” பெற்று கொள்ள வேண்டும். (”For Application in CMDA Area” என்ற லிங்க் சென்னை மாநகரை சார்ந்தது.) பதிவு செய்து  கொள்வதற்கு தங்களின் சுய தகவல்கள் (ஆதார் என், தொலைபேசி என், மின்னஞ்சல் முகவரி, பெயர்…) போன்ற தகவல்கள் அளித்தல் அவசியம்.
  • பதிவு செய்தலுக்கு பிறகு, வலைத்தளம் ”For Application in DTCP Area” வில் உள்ள  ‘’User login’’ உள்நுழைவு வாயிலாக ”User Id and Password” தகவல் செலுத்தி உள்நுழைதல் அவசியம்.
  • உள்நுழைவுக்கு பிறகு ”எந்த வகை வரைமுறை” செய்தல் என்பதனை தேர்வு செய்தல் அவசியம், மூன்று வரை முறை வகைகள் உள்ளன.

லேஅவுட் உள்ள பிளாட்களை வரன் முறை செய்தல்,

சப்-டிவிஷன் மனைகளை வரன்முறை செய்தல்

லேஅவுட் வரன்முறை செய்தல்

  • இதில் தங்களுக்கு தேவையான வரன் முறை வகையை தேர்வு செய்து கொண்டு ”Apply” செய்ய வேண்டும். மேற்படி மனுசெய்தலுக்கு ஒருமனைக்கு ரூபாய் 500 ஆகும்.
  • உள்நுழைவுக்கு பிறகு, கொடுக்கப்பட்டுள்ள மனுவை சரியான தகவல்கள் செலுத்தி ஆன்லைனில் பூர்த்தி செய்தல் அவசியம்.
  • Engineer வைத்து மனைபிரிவில் தங்கள்மனையை மட்டும்  தனித்து காட்டி வரைபடம்  தாயார் செய்ய வேண்டும் (அம்மோனியா பிரிண்டில்). மேற்படி வரைபடம் அரசின் சர்வே எண், புலப்படத்தோடு தீர்க்கமாக பொருந்த வேண்டும் இந்த வரைபடத்தை 3 புளு பிரிண்ட், A3 அளவில்  எடுக்க வேண்டும்.
  • நம்முடைய ஆவணம், மூல ஆவணம், சிட்டா, அடங்கல், பட்டா, புலப்படம், மேற்கண்ட வரைபடம், ஆகியவற்றில் நோட்டரி வழக்கறிஞர் கையொப்பம் பெற வேண்டும்.  பட்டா இடம்  உரிமையாளர் பெயரில் இருத்தல் அவசியம், குறைந்தது கூட்டுபட்டாவில் ஆவது இடம்  உரிமையாளர் இருக்க வேண்டும்.
  • மேற்படிஆவணங்கள்அனைத்தும் இணைத்து  DTCP ஆபிஸில்/ஆன்லைனில்  மனு செய்ய வேண்டும். அவர்கள் அதனை சரிபார்த்து முத்திரையிட்டு உள்ளாட்சி துறைக்கு அதாவது ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/பேரூராட்சி க்கு Forward செய்வார்கள்.
  • உள்ளாட்சி துறை அலுவலுகத்திற்கு  நம்முடைய மனு வந்தவுடன், உள்ளாட்சி துறை அலுவலர்கள் இடத்தினை பார்வையிடுவர், எந்த சிக்கலும் இல்லா நிலையில், மனைக்கான வரன்முறை கட்டணத்தை செலுத்துதல் வேண்டும். பிறகு அங்கிருந்து மீண்டும் டிடிசிபி அலுவலகத்திற்ககு நம்முடைய மனு Forward செய்யப்படும். அங்கு நம்முடைய வரைபடத்தில் டிடிசிபி முத்திரையிட்டு அங்கிகாரமும் அதற்கான எண்ணும் வழங்குவார்கள்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!