பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney செயல்முறை:

Please follow and like us:
onpost_follow

பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) Power Of Attorney என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் என்ன என்பதை தொடர்ந்து பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) நடைமுறை செய்யும் முறையை பார்க்கலாம்.

நம்பிக்கையான ஒருவரை தேர்வு செய்து அவருக்கு 1. பொது பவர் ஆப் அட்டார்னி (General power of attorny or GPA) அல்லது  சிறப்பு பவர் ஆப் அட்டார்னி (Special power of attorny) பவரை ஆவனம்செய்து (பத்திரம்,  முத்திரை தாளில்) தமிழக அரசு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Power Of Attorney – பவர் ஆப் அட்டார்னி (பிஓஏ) என்றால் என்ன மற்றும் அதன் வகைகள் என்ற தலைப்பில் விளக்கியது போல, 2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.

எத்தனை ஏஜெண்டுகள்:

பொதுவாக ஜெனரல் பவர் ஆப் அட்டார்னியில் ஒரே ஒரு ஏஜென்ட்டை மட்டும் நியமிப்பார்கள், ஒன்றிற்கு  மேற்பட்ட ஏஜென்ட்களை நியமிக்கலாம்  அதற்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. நியமிக்கப்படும் ஏஜென்ட்கள் , சேர்ந்தே கையெழுத்து இட வேண்டுமா அல்லது தனி தனியாக கையெழுத்து இட்டு வேலைகளை செய்ய வேண்டுமா என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். எதுவுமே குறிப்பிடாமல் இரண்டு நபருக்கு பவர் கொடுத்தால் இரண்டு பேருமே சேர்ந்தே அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் . ஆவணங்களில் இரு நபருமே கையெழுத்து இட வேண்டிய நிலை இருக்கும்.

பவர் ரத்து:

தேவை ஏற்பட்டால் நியமித்த ஏஜென்ட்டை/ஏஜெண்ட்டுகளை நீக்கமும் செய்யலாம், அதற்கு தனியாக பவர் ரத்து பத்திரம் ஒன்று எழுதி பத்திர அலுவலகத்தில் பதிய வேண்டும். ஒரு ஏஜென்ட்டை நியமித்து அவரை நீக்கும் வரை அந்த ஏஜென்ட் செய்த எல்லா வேலைகளும் பவர் கொடுத்தவரை கட்டுபடுத்தும். ஏஜென்ட் செய்த வேலைகள் எல்லாம் சட்டப்படி பவர் கொடுத்தவர் செய்த வேலைகளாகவே கருதப்படும்.

பணபரிமாற்றம்:

பொதுவாக பவர் பத்திரத்தில் எழுதி கொடுப்பவர் , எழுதி வாங்குபவரிடமிருந்து எந்த பணமும் வாங்கவில்லை என்ற உறுதிமொழியும் எழுதி இருக்க வேண்டும். பணபரிமாற்றம் நடந்திருக்கும் பொது அதற்க்குரிய  முத்திரைதாள் & பதிவு கட்டணம் கட்ட வேண்டும். இவ்வாறு பணபரிமாற்றம் நடந்து வழங்கிய பவரை ரத்து செய்ய இயலாது. இதனை ” IRREVOCABLE POWER OF ATTORNEY” என்று கூறுவர்.

முத்திரைதாள் செலவுகளை மிச்சம் செய்வதற்காக சிலர் பணம் வாங்கி கொண்டு , பவர் பத்திரத்தில் பணம் வாங்கவில்லை என்று எழுதி கொள்வர், அப்பொழுது பணபற்று ரசீது தனியாக ஒரு பத்திரம் மூலம் எழுதி கொள்வர், பத்திரம் மற்றும் பணபற்று ரசீதும் ஒரே தேதியிலோ அல்லது அதற்கு மறுநாளோ இருந்தால் சட்டம் அதனை கிரையம் என்றே கருதுகிறது. பணம் பெற்றவர் பின்னாளில் பவர் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது , அதனை ரத்து செய்யும் அதிகாரம் குறைவாக உள்ளது.

கட்டண விபரங்கள்:

ஆவணத்தின் தன்மைமுத்திரைத் தீர்வைபதிவுக் கட்டணம்
i) பொது அதிகாரம் விற்பனை
 செய்வதற்கு (குடும்ப நபர் அல்லாதவருக்கு)
Rs100RS10,000
ii) பொது அதிகாரம் விற்பனை செய்வதற்கு
(குடும்ப நபருக்கு)
Rs100Rs1,000
iii) பொது அதிகாரம் விற்பனை தவிர இதர
காரியங்களுக்கு
Rs100Rs50
iv) பொது அதிகாரம் (கைமாற்று தொகையுடன்)4% கைமாற்றுத் தொகைக்குகைமாற்று தொகைக்கு 1% அல்லது ரூ.10,000/- இதில் எது அதிகமோ
அத்தொகை வசூலிக்கப்பட வேண்டும்.

பவர் validity:

ஒரு ஏஜென்ட்டை நியமித்து விட்டு , அந்த ஏஜென்ட்டை நீக்கமால் பவர் எழுதி கொடுத்தவர் இறந்து விட்டாலோ , மனநிலை பாதிக்கபட்டலோ, அந்த பவர் பத்திரம் செல்லாதாகி விடும்.

ஜெனரல் பவர் ஆப் அட்டார்னிக்கு சொத்து கிரையம் செய்யும் அதிகாரம் உண்டு எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் தான் கட்டாயம் பதிய வேண்டும். ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி பொறுத்தவரை எழுதி கொடுப்பவர் எழுதி கொடுத்த தேதியில் இருந்து 3௦ நாட்கள் வரை தான்  உயிருடன் உள்ளார் என்று பதிவு அலுவலகம் ஒத்துகொள்ளும் அதற்கு பிறகு பவர் எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார் என்று அரசு மருத்துவரிடம் இருந்து லைப் சர்டிபிகேட் பெற்று பவர் வாங்கிய ஏஜென்ட் பதிவு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி:

ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி பத்திரம் சொத்து கிரையம் சம்பந்தம் இல்லாத வேலைகளுக்கு அதிகாரம் கொடுக்கலாம். அதனை பத்திர அலுவலகத்தில் பதிவும் செய்யலாம் அல்லது நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் அத்தாட்சி பெற்று பவர் எழுதி கொடுக்கலாம்.ஸ்பெசல் பவர் ரூ.2௦ பொது பவர் ரூ.1௦௦ , பணம் வாங்கிய பவர் & கொடுத்த தொகைக்கு 4% என முத்திரைதாள் வாங்க வேண்டும்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!