இடைக்கால பட்ஜெட் 2019 – ரியல் எஸ்டேட் துறைக்கான மூன்று முக்கிய திருத்தங்கள்

Please follow and like us:
onpost_follow

பணமதிப்பிழப்பீடு, GST வரி போன்ற காரணங்களினால் துவண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆதரவாக சில மாற்றங்கள் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது அவற்றில் முக்கிய மூன்று திருத்தங்களை பார்க்கலாம்.


வரி விளக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது

முன்பு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்//பில்டர்களுக்கு தாங்கள் கட்டின வீடு/பிளாட்டிற்கு ஒரு வருடம் மட்டுமே வரி விளக்கு, ஒரு வருடத்தில் விற்க முடியவில்லை என்றால் இரண்டாம் வருடம் முதல் அவர்கள் அதற்கான வரி செலுத்துதல் அவசியம், இடைக்கால பட்ஜெட்டின் மூலம் இந்த காலக்கெடு இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வருடத்தில் இருந்து தான் விற்கப்படாத வீடுகளுக்கும் வரி செலுத்த வேண்டும். இதனால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்/ பில்டர்களுக்கு ஒரு வருடத்தில் விற்றாக வேண்டும் என்ற நெருக்கடி சற்றே குறையும்.


வரி விளக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது

ஒரு நிதி ஆண்டில் 1,80,000 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலித்தால் டிடிஎஸ் (Tax Deducted At Source – TDS) பிடித்தம் செய்ய வேண்டும் என்று இருந்த விதியை தற்போது 2,40,000 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.இது ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும். சென்ற வருடம் தமிழ்நாடு அரசு சொத்து வரியை உயர்த்திய நிலையில், தற்போது வரி விளக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது சிலர்க்கு சற்றே ஆறுதலான செய்தி.


ஒரே சொத்திற்கு பதிலாக இரண்டு சொத்தில் முதலீடு செய்யலாம்

ஒருவர் ஒரு வீட்டை/சொத்தை விற்று வரும் பணத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். அப்படி அவர் வரி செலுத்த விரும்பவில்லை என்றால், அந்த பணத்தில் வேறு ஒரே ஒரு வீடு /சொத்து வாங்கிக் கொள்ளலாம் என தான் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை/சொத்தை விற்று கிடைக்கும் பணத்தில் இரண்டு வீடு/சொத்து வரை வாங்கிக் கொள்ளலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். சொத்தை விற்று வரும் பணத்தை ஒரே இடத்தில முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை தற்போது இரண்டு சொத்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மௌத்துக்கு வர சொன்னா, நாற்பதாம் நாள் பாத்திஹாவிற்கு வந்து இருக்கிறது அரசு.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!