வாடகை ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசின் புதிய விதிமுறை

Please follow and like us:
onpost_follow


பிப்ரவரி22, 2019 முதல் தமிழ் நாட்டில் வாடகை ஒப்பந்தங்களை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாடகை சட்டத்தை கருவாக கொண்டு, தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர், உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஒழுங்குமுறை சட்டம் 2017 (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017), அமலுக்கு வருகிறது, இது அமலில் இருந்த தமிழ்நாடு கட்டிட வாடகை கட்டுப்பாட்டு சட்டம் 1960 ( Tamil Nadu Buildings (Lease and Rent Control) Act, 1960 ) நிவர்த்தி செய்கிறது. தமிழ்நாடு கட்டிட வாடகை கட்டுப்பட்டு சட்டம் 1960, குடியிருப்போர்க்கு சாதகமாக அமைந்தது எனது பலரின் கருத்து.

தமிழக முதல்வர் இதற்காக ஒரு வலைதளத்தையும் (https://www.tenancy.tn.gov.in/ )துவக்கி வைத்தார், இதன் மூலமாக நில உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்த எண்னை உருவாக்கி கொண்டு, அதனை தகுந்த வாடகை ஒப்பந்த ஆணையத்துடன் பதிவு செய்து கொள்ளுதல் அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாடகை ஆணையம் என்று ஒன்று உருவாக்க படும், அதனில் துணை கலெக்டர்க்கு சமமாக அதிகாரம் கொண்ட தலைவர் அமைக்கப்படுவார். இந்த ஆணையத்தின்  கீழ், நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர்களுக்குள் எழும் சர்ச்சைகளுக்கு நீதி வழங்கும்.

அணைத்து மாவட்டங்களிலும் இந்த ஆணையத்தின் கீழ் வாடகை தீர்பாயங்கள் மற்றும் நீதி மன்றங்கள் அமைக்கபடும். அணைத்து வாடகை ஒப்பந்தங்களும் இனி எழுதபெற்று, வாடகை ஆணையத்தின் கீழ் பதிவு செய்தல் கட்டாயம். புதிய சட்டத்தின் கீழ், வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தும் அடுத்த 90 நாட்களில் பதிவு செய்தல் வேண்டும். இந்த புதிய சட்டத்தின் நோக்கம் நில உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர்களுக்குக்கிடையே சமநிலை உண்டாக்குதலே.

2017லில் இந்த சட்டம் தமிழக சட்ட சபையில் பரிந்துரைக்கபெற்று 2018இல் அங்கீகரிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி, தமிழ்நாட்டில் 23.4% மக்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். இச்சட்டம் எவ்வளவு சீராக நடைமுறை படுத்தப்படும், மற்றும் மக்களுக்கு எவ்வளவு பயனளிக்கும் என்பதனை காலம் கூறும்.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!