முடிவுகள் – கருத்துக்கணிப்பு – ராஜகிரி மற்றும் பண்டாரவாடை நிலம் விலை நிலவரங்கள் 2019

Please follow and like us:
onpost_follow

தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். இதை போன்ற கருத்துக்கணிப்புகளை அல்ஷிஃபா வருடத்திற்க்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம், நிலம் விலை நிலவரங்களை பற்றி ராஜகிரி மற்றும் பண்டாரவாடையின் மக்களின் கருத்துகளை கேட்டு உணர  வேண்டும் என்பதே.

இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 55 நபர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர், அவர்களில் ஆண்கள் 90.91%, பெண்கள் 9.09%.

நிலம் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் 25+ வயதிற்கு மேல் உள்ளவர்களாகவே இருப்பர், அதனை கருத்தில்கொண்டே 25+ வயதினர் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. கலந்துகொண்ட மக்களில் பெரும்பான்மையாக 30நபர்கள் (55%) 30-50 வயதினர்கள், (16%) 50-60வயதினர்கள்,  மற்றும் 01நபர் (1.89%) 60+ , 15நபர்கள் (27%) 20-30 வயதினர்கள். கலந்துகொண்டர்வர்களில் பெரும்பான்மையானவர்கள் நடுத்தறவயதிறனர்கள் என்பதால் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் உண்மையை பிரதிபலிக்கும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து

ராஜகிரி / பண்டாரவாடையின் பூர்விக குடியிருப்புப்பகுதி நிலங்களின், தற்போதைய விலை நிலவரங்களை தாங்கள் அறிவீர்களா? என்ற கேள்விக்கு,

55% மக்கள் விலை நிலவரம் தெரியவில்லை என்றும், 45% மக்கள் விலை நிலவரம் தெரியும் என்றும் தங்களது கருத்துக்களாக பதிவிட்டு உள்ளனர். 55% மக்கள் விலை நிலவரம் சரியாக தெரியவில்லை என்ற கருத்து, சற்றே வருத்தம் அளிக்கிறது

ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் பூர்விக குடியிருப்புப்பகுதி நிலங்களின் தற்போதைய விலை நிலவரங்களை பற்றிய உங்கள் கருத்து என்ற கேள்விக்கு

அதாவது 83% மக்கள் விலை அதிகம் மற்றும் விலை மிக அதிகம் என்றும் கருதுகிறார்கள். ராஜகிரி மற்றும் பண்டாரவாடை அருகில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வழுத்தூர், அய்யம்பேட்டை போன்ற ஊர்களின் விலைகள் (தோராயமாக 600/Sqft), ராஜகிரி மற்றும் பண்டாரவாடையை விட கணிசமாக குறைந்து இருப்பது இதற்க்கு ஒரு காரணமாகலாம். ராஜகிரி மற்றும் பண்டாரவாடையின் விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுவது, இட பற்றாக்குறை என்பதே, உண்மையில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடையின் பூர்ண குடியிருப்பு பகுதிகளில் 16ருக்கும் மேற்பட்ட இடங்கள் விற்பனை ஆகாமல் இருக்கின்ற நிலையில் , இட பற்றாக்குறை என்பது கேள்விக்குரியது, ஏன் அப்போது விலை ஏற்றம்?

ஒரு பொருளை பெரும்பான்மையினர் விரும்ப, அதன் விலை அதிகரித்தது, இப்போது அதே விலையில் அணைத்து பொருள்களும் விலை கூறப்படுகின்றது, சுருக்கமாக ஒரு சிலர் தன ஆசைக்காக ஒரு இடத்தினை அதிகவிலையில் பெற்றதால், விற்பவர்கள் அனைவரும் அதே விலை கூறுவது, வாங்குபவர்களுக்கு கஷ்டம் உண்டாக்குகின்றது. Unfortunately, exceptions has been taken as example.

விற்பவர்கள் கவனத்திற்கு: 83% மக்கள் ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் பூர்விக குடியிருப்புப்பகுதி நிலங்களின் விலை அதிகம் என கருதுகிறார்கள்

ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் பூர்விக குடியிருப்புப்பகுதி நிலங்களின் விலை அதிகம் என கருதி வெளிஊர்களில் நிலம் வாங்கி உள்ளீர்களா? என்ற கேள்விக்கு

24% மக்கள் வெளி ஊர்களில், நிலம் வாங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளனர், இது அதிகரித்தால் நம்மூர் மக்கள் வெளியூர்களிலும் ,
வெளியூர் மக்கள் நம்மூரிலும் இடமபெயர்தல் நேரிடலாம். 76% மக்கள் வெளி ஊர்களில் இடம் வாங்க இல்லை.

ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் பூர்விக குடியிருப்புப்பகுதியில் உங்கள் நிலம் விற்பதாக இருந்தால் எவ்வளவு விலைக்கு விற்க எண்ணுவீர்கள்? என்ற கேள்விக்கு

34% மக்கள் 850/sqft விற்க எண்ணுகிறார்கள் என்பது நல்ல செய்தியாக இருந்தாலும், இது சந்தை நிலவரத்தினில் குறைவு, பெரும்பான்மையினர் 1000/Sqft கேட்பது வழக்கமாகிவிட்டது. 1000/Sqft என்பதே விலை அதிகம் என்ற நிலையில், ஆயிரத்திற்கும் மேல் விற்க  வேண்டும் என்று 11% எண்ணுகிறார்கள். 31%மக்கள் தெரியவில்லை என்ற கருத்து தெரிவித்து உள்ள நிலையில், எங்களை போன்ற இதனை தொழிலாக செய்பவர்கள் நேர்மையான, நடுநிலையான முறையில் மக்களை வழிநடத்துதல் அவசியம்.

ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் பூர்விக குடியிருப்புப்பகுதியில் நீங்கள் நிலம் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு விலைக்கு வாங்க எண்ணுவீர்கள்? என்ற கேள்விக்கு,

வாங்குபவர்களில் அநேகமானோர் வயிற்று வலி காரர்களை தேடுகிறார்கள் என்பது தெரிகிறது, நல்ல விலைக்கு இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறந்ததே ஆனால் மற்றவர்களின் சூழ்நிலைகளை பயன்படுத்தி விலை கேட்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. விற்பவர்கள் அதிக விலைக்கு விற்க நினைப்பதும், வாங்குபவர்கள் அநேகமானோர் வயிற்றுவலி காரர்களை தேடுவதும் தற்போதைய நிலவரம். சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, பொருளுக்கு தகுந்த மதிப்பு கொடுத்தல் தான் முறை.

ராஜகிரி / பண்டாரவாடையில் புதிய குடியிருப்புப்பகுதிகள் (மனைப்பிரிவுகள்) அமைந்தால் அதனுடைய விலை எவ்வாறு இருத்தல் வேண்டும் என எண்ணுகுறீர்கள்? என்ற கேள்விக்கு

44% மக்கள் 400-500/Sqft , 18% மக்கள் 500 -600/Sqft, 16% மக்கள் 600-700/Sqft என்றும், 22% தெரியவில்லை என்றும் பதிலளித்துள்ளார்கள.

ராஜகிரி மற்றும் பண்டாரவடையின் அடிப்படை வசதிகளை பற்றிய உங்கள் கருத்து? (ரோடு, கார்பொரேஷன் தண்ணீர், துப்புரவு தூய்மை, போன்றவைகள்) என்ற கேள்விக்கு

43% மக்கள் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக உள்ளது என்றும், 37% மக்கள் ஏதோ இருக்கு என்றும் கருத்துதெரிவித்து உள்ளனர், இதனை மக்கள் பிரதிநிதிகள் கருத்தில் கொள்ள வேண்டும். 20% மக்கள் நன்றாக உள்ளது மற்றும் மிகவும் நன்றாக உள்ளது என்று, தங்களின் எதையும் தாங்கும் இதயத்தினை வெளிக்காட்டியுள்ளனர், என்பது சிறப்பு தகவல்.

ராஜகிரி மற்றும் பண்டாரவடையில் இயங்கும் அரசு அலுவலகங்களின் சேவையை பற்றிய உங்கள் கருத்து? என்ற கேள்விக்கு

ராஜகிரி மற்றும் பண்டாரவடையில் இயங்கும் அரசு அலுவலகங்களின் சேவையை பற்றிய உங்கள் கருத்து? என்ற கேள்விக்கு 47% மக்கள் ஏதோ இருக்கு என்றும், 29% மக்கள் மோசமாக உள்ளது என்று பதிலளித்துள்ளார்கள். ராஜகிரி மற்றும் பண்டாரவாடையில் வேலை செய்யும் அரசு ஊழியர்களின் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். நன்றாக உள்ளது என்று 20% மக்கள் பதிலளித்துள்ளார்கள். மிகவும் நன்றாக உள்ளது என்று யாரும் கருத்துஅளிக்காதது குறிப்பிடத்தக்கது.

அடிப்படை வசதிகளை பற்றி – 43% மக்கள் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக உள்ளது என்றும், அரசு சேவைகளை பற்றி – 48% மக்கள் ஏதோ இருக்கு என்றும், 29% மக்கள் மோசமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர். ராஜகிரி / பண்டாரவாடையின் பூர்விக குடியிருப்புப்பகுதி நிலங்களின், தற்போதைய விலையை, 83% மக்கள் விலை அதிகம் மற்றும் விலை மிக அதிகம் என்றும் கருதுகிறார்கள், இத்தகைய சூழலில் ஏன் இந்த விலை ஏற்றம்? ஊரார்கள், ஊரார்களோடு, வாழ நிர்ணயிக்க பட்ட விலை தோராயமாக 55-65லட்சம் (2400/Sqft மனை+புதிய வீடு). சஊதி மக்கள் தங்களுக்கு தானே திருமணத்தை கடினமாக்கி கொண்டது போல் இருக்கிறது சூழ்நிலை, இதன் விளைவுகள் என்ன?

விலை அதிகம் என கருதி 25% மக்கள் வெளியூர்களில் இடம் வாங்கியுள்ளனர். விற்கவாய்ப்பு ஏற்பட்டால், 34% மக்கள் 850/sqft விற்க எண்ணுகிறார்கள் என்பது நல்ல செய்தியாக இருந்தாலும், இது சந்தை நிலவரத்தினில் இல்லை. ஏன் இது சந்தை நிலவரத்தில் இல்லை?

விற்பவர்கள் அதிக விலைக்கு விற்க நினைப்பதும், வாங்குபவர்கள் அநேகமானோர் வயிற்றுவலி காரர்களை தேடுவதும் தற்போதைய நிலவரம். சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, பொருளுக்கு தகுந்த மதிப்பு கொடுத்தல் தான் முறை.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!