இந்தியா, வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தில் உள்ளது. ”NITI அயோகின்” ஒரு ஆய்வு 2020குள் , இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, சென்னை உள்பட 21இந்திய நகரங்களில் நிலத்தடி நீர் வற்றிப்போகும் என்று ஒரு அதிர்ச்சியான தகவலை அளித்துள்ளது.
சுட்டு ஏரிக்கும் வெயிலும், தண்ணீர் பஞ்சமும் மனிதர்களுக்கு தாங்க இயலாத துயர் கொடுக்கும். தற்சமயம் சென்னையின் நிலையும் அதுவே. சொகுசு குடியிருப்பு பகுதி முதல், பிற்படுத்தப்பட்டோர் வாழும் இடங்கள் என அனைவரும், தண்ணீர் லாரிகளையும், மாநகராட்சி குடி நீரையுமே நம்பி உள்ளார்கள். நிலத்தடி நீர் பெரும்பாலும் வற்றிவிட்டது. மக்கள் தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணத்தில், ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்க்கு குடிபெயர்கின்றனர்.
இந்த கொடிய நிலைக்கு காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது என்றாலும், நீர் நிலைகள் குடியிருப்புகளாகவும், குப்பை மேடுகளாகவும், ஆக்கிரமிப்புகளாலும் மறைந்து போனதும், அரசின் மெத்தனப்போக்கும் மற்ற முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது. 3000 நீர் நிலைகள் இருந்த இடத்தில தற்போது மிகக்குறைவான நீர் நிலைகளே உள்ளன.
சென்னையில் கடல்நீர் சுற்றிக்கரிக்கும் ஆலைகள் இரண்டு தற்போது இயங்கிவருகிறது, இன்னும் இரண்டு ஆலைகள் விரைவில் அமைக்கபெறுகின்றது. அரசு, அருகில் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்கிறது, நிலைமையை எதிர்கொள்ள 233கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களால் தற்போது ஒரு குடம் தண்ணீர் 25ரூபாய்க்கும், ஒரு லாரி 5000ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.
தமிழக அரசு சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் 21 மாவட்டங்களை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் நமக்கு கற்பிக்கும் பாடங்கள்:
நம் மாவட்டம் கடல் பாங்கான மாவட்டம் அல்ல, கடல்நீர் சுற்றிக்கரிக்கும் ஆலைகளை கொண்டு நிலைமையை ஓர் அளவு எதிர்கொள்ள. வான் மழையையும், நிலத்தடி நீரையுமே சார்ந்த பகுதி, ஆக கவனம் மிகத்தேவை
ஓடுகின்ற நீர் ஓடைகளில் ஒழு செய்தாலும், சிக்கனம் தேவை – நபிமொழி
நீர் நிலைகளை பாதுகாத்தல் அவசியமானது.
மழை நீர் சேகரிக்கும் தொட்டி அனைவரின் வீட்டிலும் மிக அவசியமானது.
விவசாய பயன் பாட்டிற்கு, தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தும் முறையையும், நிலத்தடி நீரினை மேல் கொண்டு வரும் முறையையும் கையாளுதல்.
கழிவு நீர்களை மீள்சுழற்சி முறைக்கு உட்படுத்துதல்
மரங்களை நடுதல் மற்றும் பாதுகாத்தல்.
படைத்தவனை தவிர, நீரினை யாரும் உற்பத்தி செய்வது இல்லை, மேல் கூறப்பட்ட முறைகள் பாதுகாக்கும் முறைகளே தவிர, உற்பத்தி முறை அல்ல .