ஜூன் 2019இல் RBI கடன் வட்டி விகிதத்தை 5.75% குறைத்தது, இந்த அளவிற்கு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதை ஊக்கப்படுத்துவதற்காக இது செய்யப்பட்டது.
தற்போது பட்ஜெட் 2019இல், வீட்டுக்கடன்களுக்கு அரசாங்கம் வரிவிலக்குகளை அதிகப்படுத்தி உள்ளது. இதன்படி வருமான வரி சட்டம் பிரிவு 24இன் படி 2லட்சமாக இருந்த வரிவிளக்கு தொகையை 3.5லட்சமாக உயர்த்தியுள்ளது, ஆக தற்போது முதல்முறை சுயபயன்பாட்டிற்காக வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு 3.5லட்சம் வரை வரிவிளக்கு அளிக்கப்படும். இது 45லட்சத்திற்குள் மதிப்பு கொண்ட வீடாக (Affordable housing) இருத்தல் அவசியம். வீட்டுக்கடன் வட்டி திரும்ப செலுத்தும் காலம், 15வருடமாக இருப்பின், இந்த 3.5லட்சம் வரிவிலக்கு 7லட்சமாக பயனளிக்கும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு பயனளித்தாலும், வட்டியில் இருந்து விலகி நிற்கும் சிறுபான்மையினர்களுக்கு சலுகைகள் வருமாயின், மகிழ்ச்சி அளிக்கும். வட்டியில்லா வங்கிகள் மேலைநாடுகளில் துவங்கப்படுவதை போல இந்தியாவிலும் பெரும் அளவில் துவங்கப்படுவது நன்மைபயக்கும், இதனை நோக்கி நம் சமூகம் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.