இடத்தின் உங்களுக்கான உரிமையை நிலைநாட்ட மிகவும் முக்கியமான ஆவணங்களில் பத்திரம் ஒன்று, அது தொலைந்து விட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்,
சிக்கல்களை தவிர்க்க செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்
வீடு/இடம் இருக்கும் பகுதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று உங்கள் விற்பனைப் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (Certified copy) ஒன்றை விண்ணப்பித்து அதைப் பெற வேண்டும், கூடவே விற்பனைப் பத்திரம் தொலைந்துபோனதிலிருந்து தற்போதுவரை உள்ள காலகட்டத்துக்கான ஒரு வில்லங்கமில்லாச் சான்றிதழையும் பெற வேண்டும்.
இதன் மூலம் தொலைந்த உங்களது விற்பனைப் பத்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்துவிடலாம்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து மனு ரசீது பெற்று கொள்ளுங்கள், பின்பு காவல் நிலையத்தில் F.I.R. பதிவு செய்வார்கள், அதன் நகலை பெற வேண்டும்.
ஓர் ஆங்கில நாளிதழிலும், ஓர் உள்ளூர் நாளிதழிலும் விற்பனைப் பத்திரம் தொலைந்ததை விளம்பரப்படுத்த வேண்டும்.
விளம்பரம் செய்தும் கண்டுபிடிக்க முடியவில்லையெனில், ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழைக் (Non traceable Certificate) காவல்துறையிடமிருந்து பெற வேண்டும்
உங்கள் இடத்தின் உரிமை தொடர்பாக – யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதை நோட்டரி வழக்கறிஞர் கடிதம் மூலம் நீங்கள் பெற வேண்டும். 1. சான்றளிக்கப்பட்ட பிரதி (Document Certified copy)
2. காவல் நிலையத்தில் பெற்ற மனு ரசீது மற்றும் F.I.R. பிரதி
3. கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்று (Non traceable Certificate)
4. விளம்பர பிரதி
5. நோட்டரி வழக்கறிஞர் கடிதம்
இவை அனைத்தும் சேர்ந்து உங்கள் தொலைந்த அசல் ஆவணத்திற்கு பதிலாக பயன்படுத்தி கொள்ளலாம்