ஏன் நிலத்தில் முதலீடு செய்தல் சிறந்தது?

Please follow and like us:
onpost_follow

நம் பொருளாதாரம் மேம்பட, நம் பணம் நமக்காக உழைத்தல் அவசியம். இன்றைய கால சூழ்நிலைகளில், நாம் சம்பாதித்த பணத்தினை முதலீடு செய்ய பல வழிகள் உண்டு உதாரணமாக வங்கிகளில், பங்குச்சந்தை பங்குகள்,  உள்ளூர் தொழில் துறைகளில் முதலீடு செய்தல், தங்கத்தில், நிலத்தில், போன்ற பல. இவற்றில் ஏன் நிலத்தில் முதலீடு செய்தல் சிறந்தது என்பதை கீழே அறியலாம்.

வங்கி

நன்மை

 • முதலீடு செய்வதற்கு எளிதான முறை
 • குறைந்த முதலீடு இருந்தாலே போதும்
 • மாதாந்திர வருமானம் ஈட்ட இயலும்
 • தேவை இருப்பின், உடனடியாக உங்கள் முதலீட்டை பணமாக மாற்றிகொள்ளலாம்
 • பாதுகாப்பான முதலீட்டு முறை

பின்னடைவு

 • முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 6% முதல்  – 8% வரை
 • அனுபவித்தல் என்பது கிடையாது
 • இஸ்லாமியர்களுக்கு வட்டி ஆகுமானது அல்ல.

பங்குச்சந்தை பங்குகள்:

நன்மை

 • முதலீடு செய்வதற்கு எளிதான முறை
 • குறைந்த முதலீடு இருந்தாலே போதும்
 • மாதாந்திர வருமானம் ஈட்ட இயலும்
 • தேவை இருப்பின், உடனடியாக உங்கள் முதலீட்டை பணமாக மாற்றிகொள்ளலாம்
 • முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 8% முதல் – 10% வரை.

பின்னடைவு

 • பங்குச்சந்தை விலை ஏற்றம் மற்றும் சரிவு, பல பொருளாதார சூழ்நிலைகளினால் பின்னப்பட்டது, ஆகையால் உங்கள் முதலீட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி உங்கள் கையில் 1% கூட இல்லை.
 • குறுகிய கால பங்குச்சந்தை வர்த்தகம் என்பது ஆபத்தானது, நீண்ட கால முதலீடு சற்றே ஆபத்து குறைவு.
 • அனுபவித்தல் என்பது கிடையாது
 • சரியான பங்குகளை தேர்ந்து எடுத்தல் என்பது எளிது அல்ல, பங்கு சந்தை  நிலவரத்தையும், பங்கு நிலவரம் பற்றியும், எப்போதும் கற்றறிந்து கொண்டே இருத்தல் அவசியம்.
 • அணைத்து பங்குகளும் ஹலால் அல்ல, ஹராம்/ஹலால் பார்த்து முதலீடு செய்தல் அவசியம்

உள்ளூர் தொழில்துறைகளில் முதலீடு செய்தல்:

நன்மை

 • முதலீடு செய்வதற்கு எளிதான முறை
 • குறைந்த முதலீடு இருந்தாலே போதும்.
 • மாதாந்திர வருமானம் ஈட்ட இயலும்.
 • முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 8% முதல் – 10% வரை.

பின்னடைவு

 • பங்குசந்தைகளின் பங்கினை போன்றே, தொழிலில் முதலீடு செய்தால் உங்கள் முதலீடிர்கான லாபம், நீங்கள் முதலீடு செய்த தொழில் நன்றாக செயல் பட்டால் மட்டுமே. முதலீடாலர்களாக முதலீடு செய்த தொழிலில், நீங்கள் நிர்வாகம் செய்ய இயலாது. கடின போட்டி, தொலை நோக்கு பார்வை இன்மை, தொழில் நடத்துவோரின் கவன குறைவு போன்ற காரணங்களினால் தொழில் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது.
 • முதலீட்டின் பாதுகாப்பு என்பது நீங்கள் முதலீடு செய்த நிறுவனத்தை / நிறுவனத்தின் உரிமையாளரை  பொருத்தது.
 • அனுபவித்தல் என்பது கிடையாது

தங்கத்தில் முதலீடு செய்தல் (ஆபரண நகை அல்ல) :

நன்மை

 • குறைந்த முதலீடு இருந்தாலே போதும்.
 • முதலீடு செய்வதற்கு எளிதான முறை
 • பாதுகாப்பான முதலீட்டு முறை
 • தேவை இருப்பின் தங்கத்தை ஆபரண தங்கமாக மாற்றி அனுபவிக்கலாம், தங்கத்தை ஆபரண தங்கமாக மாற்றுவதால் முதலீட்டின் வருமானம் குறைவு. (கூலி, சேதாரம் என்று பல வழிகளில் பணத்தை இழப்பீர்)
 • முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 8% முதல் – 10% வரை.

பின்னடைவு

 • வரிவிலக்குகள் ஏதும் கிடையாது.
 • மாதாந்திர வருமானம் கிடையாது.
 • தங்கத்தை ஆபரண தங்கமாக மாற்றுவதால் முதலீட்டின் வருமானம் குறைவு. (கூலி, சேதாரம் என்று பல வழிகளில் பணத்தை இழப்பீர்)

நிலத்தில் முதலீடு செய்தல்:

நன்மை

 • முதலீட்டை உங்கள் பெயரில் செய்கிறீர்கள், ஆதலால் பாதுகாப்பான முதலீட்டு முறை
 • பங்குசந்தைகளை போன்று விலை நிலையற்றது அல்ல, ஆகையால் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு முறை.
 • நிலத்தின் விலை பெரும்பாலும் உயர்ந்து கொண்டே இருக்கும், ஏதேனும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்பட்டால் தவிர.
 • கமர்சியல் ப்ராபர்ட்டிகளில் முதலீடு செய்வதின் மூலம் மாதாந்திர வருமானம் ஈட்ட இயலும்.
 • நல்ல இடம் தேர்ந்துஏடுப்பது, பங்குசந்தைகளில் நல்ல பங்கு வாங்குவதை போன்று கடினமானது அல்ல.
 • முதலீடு செய்வதற்கு பல வழிகள் உள்ளது.
 • வாங்கிய சொத்தினை நீங்கள் அனுபவிக்கலாம்.
 • உங்கள் முதலீடு வளர்ச்சி அடையும்
 • முதலீட்டின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 8% முதல் – 12% வரை

பின்னடைவு

 • முதலீட்டு தொகை அதிகம்
 • பரிவர்தனைக்காக ஆகும் செலவு அதிகம்
 • உங்கள் முதல்லீட்டை பணம்மாக மாற்றுவது பங்குசந்தை / வங்கிகளை போன்று எளிதல்ல, இருப்பினும் முறையான திட்டம் இருப்பின், சரியான நேரத்தில் உங்கள் முதல்லீட்டை பணமாக மாற்ற இயலும்

எங்கள் தாழ்மையான கருத்து:

ஒவ்வொரு முதலீட்டு முறையிலும் சில நன்மைகள், சில பின்னடைவுகள் உள்ளன. நீண்ட கால முதலீட்டிற்கு, நிலத்தில் முதலீடு செய்தல் மிகவும் நன்மையான முறை. பூமியில் நிலத்தின் பரப்பளவு ஒன்றே, நிலத்தினை யாரும் உற்பத்தி செய்வதில்லை ஆகையால் மக்கள் தொகை பெருக்கம், மக்களின் தேவை அதிகரிப்பு, இளைஞர்களின் வருமான பெருக்கம் போன்ற காரணங்களினால் நிலத்தின் விலை உயர்த்து கொண்டே பெரும்பாலும் இருக்கும்.

இது காலத்தால் நன்கு பரிசோதிக்கப்பட்ட முறை.

Join The Discussion

Compare listings

Compare
Follow by Email
Whatsapp
error: Content is protected !!