ஒவ்வொரு மாநிலமும், மாவட்டங்களாகவும் (District), மாவட்டகங்கள் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் (Village) பிரிக்கப்பட்டிருக்கிறது. அந்தந்த மாவட்டகங்கள்/வட்டங்கள் /கிராமங்களின் கீழ் அனைத்து நிலங்களும் அளக்கபட்டு, பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனி எண்கள் (அடையாளப்படுத்துவதற்காக) வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்களுக்கு பெயரே புல எண் (Survey Number) ஆகும், புல எண்ணிற்கு உட்பிரிவுகளும் உண்டு.
புல எண்ணின் பயன்:
நிலங்களை பொறுத்து, ”புல எண்” மிகவும் அவசியமான மற்றும் அடிப்படையான தகவல். புல எண்களைக் கொண்டே நிலத்தினை அடையாளப்படுத்துதல், நில பரிவர்த்தனை செய்தல் , வில்லங்க சான்றிதழ் பெற இயலும், அதுமட்டும் இன்றி இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்ள இயலும் அவற்றுள் முக்கிய சில,
- நிலத்தின் வகைபாடுகளை அறிந்து கொள்ள முடியும்.
- நிலம் சரியாக எங்கே அமைந்துள்ளது என்பதை அறிய முடியும்.
- எத்தனை நபர்கள் அந்த புல எண்ணிற்கு உரிமையாளர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
- நிலத்தின் நான்கு எல்லைகளை அறிந்து கொள்ள முடியும்.
- மற்ற சுற்றிய நிலங்களை பற்றி தகவல்கள் அறிந்து கொள்ள முடியும்.
நிலம் வாங்குவதற்கு முன் அதனை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்வது அவசியம், விவரங்கள் சேகரிப்பதற்கான ஒரு ஆரம்ப புள்ளியாக புல எண் அமையும்.