NRI ‘s செய்யும் மூன்று பொதுவான தவறுகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI ‘s), முதலீட்டில் செய்யும் 3 பொதுவான தவறுகள்

1.தங்களது சொந்த ஊரில் மட்டும் முதலீடு செய்வது

இது நீங்க மட்டும் செய்யும் தவறு இல்லைங்க, பொதுவா இந்தியாவில் உள்ள பெரும்பாலான NRIக்கள்  செய்யும் தவறு. 70% NRI ‘க்கள் சொந்த ஊரில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. உங்கள் சொந்த ஊரானது, வளர்ந்து கொண்டு இருக்கும் நகர் புறமாகவோ அல்லது நல்ல வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டு இருக்கும் ஊராகவோ இருப்பின் உங்கள் முதலீடு நல்ல முதலீடாக அமையும், இல்லையெனில் உங்கள் முதலீட்டில் கவனம் செலுத்துதல் அவசியம்.

சொந்த ஊரில் முதலீடு செய்வது என்பது சில அசோகரியங்களை தவிர்க்கும் என்றாலும், நம் முதலீடு எவ்வளவு காலகட்டத்தில், எவ்வளவு வேகமாக உயரும், நகர் புறங்களில் முதலீடு செய்வதினால் வரும் வருமான உயர்வு போன்ற  அனைத்தையும்  கருத்தில் கொள்ளுதல் அவசியம்.

சொந்த ஊரில் சொந்த இடம் இல்லாது இருப்பவர்களுக்கு, சொந்த ஊரில் இடம் வாங்குதல் சிறந்தது.

2.முதலீட்டை தாமதப்படுத்துதல் / முதலீட்டை தவிர்த்தல்

பூர்விக சொத்து இருக்கும் NRIக்கள், நிலங்களில் /இடங்களில் முதலீடு  செய்வதினை தவிர்க்கின்றனர் அல்லது தாமத படுத்துகிறார்கள். எந்த வில்லங்கமும் இல்லாமல்  நிலம் வாங்குதல் அல்லது இடம் வாங்குதல் என்பது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய செயல் என்பதால் இந்த பொறுப்பான செயலை தாங்கள் இந்நாட்டில் இல்லாததினால் தாமதப்படுத்துகின்றனர். பணத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறையும் என்பது இயல்பு, ஆகையால்  முதலீடு செய்யாமல் மற்றும் முதலீட்டை தாமதப்படுத்துவதால் வரும் இழப்பையும் கருத்தில் கொள்ளுதல் அவசியம்.

3.பிக்ஸ்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தல்

பிக்ஸ்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தல் என்பது NRIக்கள் செய்யும் மூன்றாவது பொதுவான தவறு. இஸ்லாமியர்களுக்கு இம்முறை ஆகுமாக்கப்பட்டது அல்ல. முதலீடு செய்ய பல வழிகள் இருப்பினும், பிக்ஸ்சட் டெபாசிட் பாதுகாப்பான வழிமுறையாக கருதப்படுகிறது. பிக்ஸ்சட் டெபாசிட்டில் இருந்து வரும் வருமானம் என்பது, மற்ற முதலீட்டில்  இருந்து வரும் வருமானத்தை விட மிகக்குறைவு. வில்லங்கம் இல்லாமல், நல்ல இடத்தினை தேர்வு செய்தால், இடத்தின் மதிப்பு உயர்ந்து வரும் லாபம் மற்ற அணைத்து முதலீட்டில் இருந்து வரும் லாபத்தை விட சிறந்தது.

ஏன் நிலத்தில் முதலீடு செய்தல் சிறந்தது?

மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக, நல்ல ரியல் எஸ்டேட் ஏஜெண்டுக்கலை சார்ந்து இருப்பது நல்ல செயல். ரியல் எஸ்டேட் ஏஜெண்ட்ஸ் இதனை தொழிலாக கொண்டவர்கள், இடத்தினில் உள்ள வில்லங்கம், சந்தை நிலவரம் மற்றும் சந்தையில் உள்ள சிறந்த ஆஃபார்களை அறிந்து இருப்பர்.

உங்கள் முதலீட்டை, சிறந்த முதலீட்டாக மாற்ற எங்களால் எவ்வாறு உதவ இயலும் என்பதை அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Join The Discussion